"நாங்க நாலு பேர்"-புகைப்படத்தை நெகிழ்ச்சியோடு நினைவுகூர்ந்த கங்குலி !

"நாங்க நாலு பேர்"-புகைப்படத்தை நெகிழ்ச்சியோடு நினைவுகூர்ந்த கங்குலி !
"நாங்க நாலு பேர்"-புகைப்படத்தை நெகிழ்ச்சியோடு நினைவுகூர்ந்த கங்குலி !
Published on

இந்திய கிரிக்கெட் அணியில் மறக்க முடியாது நான்கு பேர் இருந்தார்கள், அவர்கள் சவுரவ் கங்குலி, சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட், விவிஎஸ் லட்சுமணன் ஆகியோர்தான். ஒருநாள் போட்டிகளைக் காட்டிலும் டெஸ்ட் போட்டிகளில் இந்த நால்வரின் பங்கு அசாத்தியமானது. இந்தியா தோற்றுவிடும் என நினைத்தப் போட்டிகளில் எல்லாம் இந்தக் கூட்டணியின் பங்கு வெற்றியை தேடிக் கொடுத்திருக்கிறது.

இந்த நால்வரும் இணைந்து விளையாடிய காலம் இந்திய கிரிக்கெட் அணியின் பொற்காலம் எனக் கருதலாம். அதுவும் சவுரவ் கங்குலி கேப்டனாக இருந்தபோது இந்த டெஸ்ட் அணி பல வியக்கத்தக்க சாதனைகளை படைத்தது எனக் கூறலாம். ரசிகர்கள் எப்போதும் இந்தக் கூட்டணியை மறக்க மாட்டார்கள். கிரிக்கெட்டின் பைபிள் என அழைக்கப்படும் விஸ்டன் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த நால்வர் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது. புகைப்படத்தை பகிர்ந்தது மட்டுமல்லாமல் "இந்த நால்வரை விட தலைச்சிறந்தவர்கள் யார் ? பொறுத்திருப்போம்" என பதிவிட்டிருந்தது.

இதனை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த சவுரவ் கங்குலி "என் வாழ்வின் மிகச் சிறந்த தருணம், அதன் ஒவ்வொரு நிகழ்வையும் எண்ணி மகிழ்ச்சியடைகிறேன்" எனத் தெரிவித்துள்ளார். இந்தக் கூட்டணி ஏறக்குறைய 10 ஆண்டுகாலம் ஒன்றாக கிரிக்கெட் விளையாடினார்கள். இந்தக் கூட்டணியில் முதலில் ஓய்வுப் பெற்ற சவுரவ் கங்குலி. இப்போது பிசிசிஐ தலைவராக இருக்கிறார். பின்பு விவிஎஸ் லட்சுமணன், ராகுல் டி ராவிட் மற்றும் இறுதியாக ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் ஆகியோர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுப்பெற்றனர்.

இந்த நால்வரின் கூட்டணியில் மிகச்சிறந்த திறமை என்னவென்றால் உலகின் தலைச்சிறந்த ஸ்பின்னர்களை கூட எளிதாக சமாளித்து விளையாடக் கூடியவர்கள். அதேபோல இவர்களது காலக்கட்டத்தில்தான் உலகின் மிகச்சிறந்த வேகப்பந்து வீச்சாளர்கள் இருந்தார்கள். கங்குலி தலைமையிலான ஒருநாள் கிரிக்கெட் அணி 2003-ஆம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டி வரை முன்னேறியது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com