சோயிப் அக்தரின் ட்விட்டர் பதிவுக்கு இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி கிண்டலாக 'கர்மா சகோதரா' என தெரிவித்துள்ளார்.
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி இங்கிலாந்திடம் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, அந்நாட்டின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர், தனது ட்விட்டர் பக்கத்தில் உடைந்த இதயம் போன்ற எமோஜியை பதிவிட்டிருந்தார். அதனை ரீ-ட்வீட் செய்த இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி ‘மன்னிக்க வேண்டும் சகோதரா, இதற்குப் பெயர்தான் கர்மா’ என குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி படுதோல்வி அடைந்ததை அடுத்து சோயிப் அக்தர் கடுமையான விமர்சனங்களை வைத்திருந்தார். ''இந்திய வீரர்கள் மிகவும் மோசமாக விளையாடினார்கள். அவர்கள் இறுதிப் போட்டிக்குள் நுழைவதற்கான தகுதியை இழந்து விட்டார்கள். இந்தியாவின் வேகப்பந்து வீச்சு அம்பலமாகிவிட்டது'' என்று அவர் விமர்சித்திருந்தார். அதற்கு இப்போது பதிலடி கொடுத்திருக்கிறார் முகமது ஷமி.
இருப்பினும் முகமது ஷமியின் பதிவுக்கு பாகிஸ்தான் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இங்கிலாந்து அணியுடனான அரை இறுதி ஆட்டத்தில் ஒரு விக்கெட் கூட வீழ்த்த முடியாத உங்களின் ஆட்டத்திற்கு பாகிஸ்தான் இன்று விளையாடிய விதம் பரவாயில்லை’ என ரசிகர்கள் கடுமையான விமர்சனங்களை பதிவிட்டு வருகின்றனர். அதேசமயம், முகமது ஷமிக்கு ஆதரவாக இந்திய ரசிகர்கள் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
தவற விடாதீர்: “அன்று மைதானத்திலேயே அழுதார்”.. உலக கோப்பைகளை நனவாக்கிய ‘பென் ஸ்டோக்ஸ்’ எனும் மேஜிக் மேன்!