தவறுக்கு நானே பொறுப்பு; தடையை எதிர்த்து மேல்முறையீடு இல்லை: ஸ்மித்

தவறுக்கு நானே பொறுப்பு; தடையை எதிர்த்து மேல்முறையீடு இல்லை: ஸ்மித்
தவறுக்கு நானே பொறுப்பு; தடையை எதிர்த்து மேல்முறையீடு இல்லை: ஸ்மித்
Published on

தனக்கு விதிக்கப்பட்டுள்ள ஓராண்டு தடையை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதில்லை என ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடியது. இந்த இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டெஸ்ட் கேப்டவுனில் நடைப்பெற்றது. இந்தப்போட்டியின் போது ஆஸ்திரேலிய வீரர் கேமருன் பேன்கிராப்ட், ஏதோ ஒரு மஞ்சள் நிற பொருளை தேவைப்படும்போது வெளியே எடுத்துவிட்டு உள்ளாடைக்குள் போடுவதுமாக இருந்தார். இது, கேமராவில்  குளோசப்பில் பார்த்தபோது, அந்தப் பொருளை வைத்து அவர் பந்தை சேதப்படுத்தியது தெரியவந்தது. இதனையடுத்து நடத்த பத்திரிகையாளர் சந்திப்பில் தான் செய்த தவறை ஒப்புக்கொண்டார். மூத்த வீரர்களின் ஆலோசனைப்படிதான் பந்தின் தன்மையை மாற்ற பேன்கிராஃப்ட் முயன்றதாக ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்மித் ஒப்புக்கொண்டார். 

இதையடுத்து கேப்டன் பதவியில் இருந்து ஸ்மித்தையும், துணை கேப்டன் பதவியில் இருந்து டேவிட் வார்னரையும் நீக்கி ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் நடவடிக்கை மேற்கொண்டது. இந்நிலையில் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்துக்கு ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாட தடையும் போட்டிக் கட்டணத்தில் 100% அபராதத்தையும் ஐசிசி விதித்துள்ளது. இதேபோல் பேன்கிராப்ஃட்க்கு போட்டி கட்டணத்தில் 75% அபராதம் விதித்துள்ளது.

ஆஸ்திரேலிய வீரர்களின் செயலுக்கு கடுமையான கண்டனங்கள் எழுந்தது. இதனையடுத்து கேப்டன் ஸ்மித், துணைக்கேப்டன் வார்னர் ஆகியோருக்கு ஓராண்டு தடை விதித்துள்ளது. பேன்கிராஃப்ட்டுக்கு ஒன்பது மாதம் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

இவ்விவகாரம் தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள ஸ்டீவ் ஸ்மித், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தனக்கு விதித்த தடையை எதிர்த்து மேல்முறையீடு செய்யப் போவதில்லை எனத் தெரிவித்துள்ளார். மேலும் அணியை வழிநடத்தியவன் என்ற முறையில் நடந்த சம்பவத்திற்கு நானே பொறுப்பு ஏற்கிறேன் எனக் கூறியுள்ளார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com