அவனி லேகரா: 11 வயதில் மோசமான விபத்து... முடங்கிய வாழ்க்கை... மன உறுதியினால் வென்ற 2 தங்க பதக்கங்கள்

பாராலிம்பிக்ஸில் இரட்டை தங்க பதக்கங்களை வென்ற ஒரே இந்திய பெண்ணான அவர் யார் என்பதை விரிவாக பார்ப்போம்..
பதக்கத்துடன் அவனி லேகரா
பதக்கத்துடன் அவனி லேகராpt web
Published on

அவனி லேகரா

சாலை விபத்தினால் நடக்க இயலாமல்போன பின்னரும், தனது அசராத மன உறுதியினால் அடுத்தடுத்த பாராலிம்பிக்ஸ்களில் இந்தியாவின் மூவர்ணக் கொடியை உயர பறக்க வைத்திருக்கிறார் ஒரு இளம் பெண்..

பாராலிம்பிக்ஸில் இரட்டை தங்க பதக்கங்களை வென்ற ஒரே இந்திய பெண்ணான அவர் யார் என்பதை விரிவாக பார்ப்போம்..

மன உறுதிக்கான மறுபெயர் என்றால் அவனி லேகரா என தாராளமாய் சொல்லி விடலாம்.. ஆச்சரியப்பட வைக்கும் சாதனைகளை நிகழ்த்த, அவர் கடந்த வந்த பாதை அத்தனை கடினமானது.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரை சொந்த ஊராகக் கொண்டவர் அவனி லேகரா. சிறு வயது குழந்தைகளை போலவே ஓடி ஆடி உற்சாகமாக வலம் வந்தவரை, முடக்க முயன்றது ஒரு சாலை விபத்து... அவருக்கு 11 வயதானபோது ஏற்பட்ட விபத்தில், முதுகுத் தண்டில் அடிபட்டதன் காரணமாக, இடுப்புக்கு கீழே உள்ள பாகங்கள் செயலிழந்தன. இதனால் சக்கர நாற்காலியில் பயணிக்க வேண்டிய நிலை அவருக்கு ஏற்பட்டது.

பதக்கத்துடன் அவனி லேகரா
’அட்டகாசமான அம்சம்’- இனி பணம் அனுப்ப டெபிட் கார்டு தேவையில்லை.. UPI மூலம் ATM-ல் டெபாசிட் செய்யலாம்!

சொந்தமான வரலாற்று சாதனை

அவனி லேகரா முடங்கி விடக்கூடாது. அவரை இந்த துயரத்திலிருந்து மீட்டெடுக்க வேண்டுமென நினைத்த அவரது தந்தை, அவனி லேகராவை துப்பாக்கிச் சுடுதலில் ஈடுபடுத்தினார். தனது அர்ப்பணிப்பு, விடா முயற்சியால் விரைவிலேயே தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் சாதிக்கத் தொடங்கிய அவனி லேகரா, டோக்கியோ பாராலிம்பிக்ஸில் தனது பெயரை பதித்தார். துப்பாக்கிச் சுடுதலில் தங்கம் மற்றும் வெண்கல பதக்கங்களை வென்ற அவர், ஒரே பாராலிம்பிக்ஸில் இரண்டு பதக்கங்களை வென்ற இந்திய வீராங்கனை என்ற சாதனையை படைத்தார்.

தற்போது நடைபெற்று வரும் பாராலிம்பிக்ஸ் போட்டியிலும், எளிதாக அவனி லேகராவிற்கு தங்கம் கிடைத்துவிடவில்லை. கடந்தாண்டிலிருந்து அவர் பித்தப்பை கற்களால் அவதிப்பட்டே வந்திருக்கிறார். ஒரு கட்டத்தில் இது அவரது பயிற்சியையே பாதித்துள்ளது.

வயிற்றில் ஏற்பட்ட வலியால் வழக்கத்தை விட குறைவாக பயிற்சி மேற்கொண்டு வந்திருக்கிறார். இதனையடுத்து 5 மாதங்களுக்கு முன்னர் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, அவரது பித்தப்பையிலிருந்த கற்கள் அகற்றப்பட்டிருக்கின்றன. பின்னர் சிறிது காலம் ஓய்விலிருந்த அவர், தனது கடினமான பயிற்சியின் காரணமாக, நடப்பு பாராலிம்பிக்ஸில் பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் எஸ்ஹெச்1 பிரிவில் தங்கம் வென்று சாதித்திருக்கிறார். இதன்மூலம் பாராலிம்பிக்ஸில் இரண்டு முறை தங்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற வரலாற்று சாதனையும் அவருக்கு சொந்தமாகியிருக்கிறது..

பதக்கத்துடன் அவனி லேகரா
கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணங்கள்... “வழக்கை சிபிஐக்கு மாற்றுவதால் எந்த பயனும் இல்லை”- தமிழக அரசு

அவனி லேகரா கடந்து வந்த பாதை, அவரது தளராத உறுதி, தன்னம்பிக்கை ஆகியவை மாற்றுத்திறனாளிகளுக்கு மட்டுமின்றி, அனைவருக்கும் உத்வேகமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை...

பதக்கத்துடன் அவனி லேகரா
பாராலிம்பிக்|துப்பாக்கிச் சுடுதலில் இந்தியாவுக்கு 2 பதக்கம்.. மீண்டும் தங்கம் வென்ற அவனி லேகரா!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com