PAK v ENG | தொடர் தோல்வி.. எழும் கடுமையான விமர்சனங்கள்.. மாற்றப்படும் பாகிஸ்தான் டெஸ்ட் கேப்டன்?

இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்குப் பின் பாகிஸ்தான் அணியின் டெஸ்ட் கேப்டன் ஷான் மசூத் நீக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஷான் மசூத்
ஷான் மசூத்எக்ஸ் தளம்
Published on

பாகிஸ்தானுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி, 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. அந்த வகையில், இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி, முதல் இன்னிங்ஸில் 149 ஓவரில் 556 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பின்னர் முதல் இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணி, நான்காம் நாளில் 7 விக்கெட்டுக்கு 823 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. இதன்மூலம், பல சாதனைகள் படைக்கப்பட்டன.

குறிப்பாக, அவ்வணில் முச்சம் (317) அடித்த ஹாரி புரூக்கும், இரட்டைச் சதம் (262) அடித்த ஜோ ரூட் பல்வேறு சாதனை பட்டியலில் இடம்பிடித்தனர்.

இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய பாகிஸ்தான் அணி, 220 ரன்களுக்குச் சுருண்டது. இதன்மூலம் 47 ரன்கள் மற்றும் இன்னிங்ஸ் வெற்றிபெற்றது. 147 ஆண்டுகால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதல் இன்னிங்ஸில் 500க்கும் மேற்பட்ட ரன்கள் குவித்து தோல்வி அடைந்த ஒரே அணியாக பாகிஸ்தான் மோசமான சாதனையை படைத்திருக்கிறது. இந்த தோல்வியால், பாகிஸ்தான் அணி மேலும் விமர்சிக்கப்பட்டு வருகிறது.

இதையும் படிக்க: ”அந்த ட்ரெஸ் உனக்கு சரியில்ல.. மீறினா ஆசிட் ஊத்துவேன்” - மிரட்டிய இளைஞர்.. நிறுவனம் கொடுத்த ஷாக்!

ஷான் மசூத்
PAK Vs ENG|ஒரே டெஸ்ட் போட்டி.. கதகளி ஆடிய இரு இங்கிலாந்து வீரர்கள்.. பல சாதனைகள் படைத்த ஹாரி புரூக்!

இந்த நிலையில், பாகிஸ்தான் அணியின் டெஸ்ட் கேப்டன் ஷான் மசூத் நீக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பிசிபி) மசூத்தை மாற்ற விரும்புவதாக கூறப்படுகிறது. அவரது கேப்டன்சியில், பாகிஸ்தான் சொந்த மண்ணில் ஒரு டெஸ்டில்கூட வெற்றி பெறவில்லை. இங்கிலாந்துக்கு எதிரான முல்தான் டெஸ்டில் ஏற்பட்ட தோல்வி மசூதின் பிரச்னைகளை மேலும் அதிகரித்துள்ளது.

இங்கிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட தொடரின் முடிவில் மசூத் அணியின் டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்படுவார். மசூத்துக்குப் பதிலாக சவுத் ஷகீல், முகமது ரிஸ்வான் மற்றும் சல்மான் அலி ஆகா ஆகியோரின் பெயர்கள் பரிசீலனையில் உள்ளதாகக் கூறப்படுகிறாது. முன்னதாக, வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரையும் இவரது தலைமையிலான பாகிஸ்தான் அணி இழந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: ’போய் பிச்சை எடுங்க’ - விரட்டிய பிள்ளைகளால் பெற்றோர் எடுத்த விபரீத முடிவு.. ராஜஸ்தானில் கொடூரம்!

ஷான் மசூத்
PAKvENG| 147 ஆண்டுகால டெஸ்ட் கிரிக்கெட்... முதல்முறையாக மோசமான சாதனையைப் படைத்த பாகிஸ்தான்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com