உலகக் கோப்பை வரலாற்றில் ஷகிப் அல் ஹசன் புதிய சாதனை

உலகக் கோப்பை வரலாற்றில் ஷகிப் அல் ஹசன் புதிய சாதனை
உலகக் கோப்பை வரலாற்றில் ஷகிப் அல் ஹசன் புதிய சாதனை
Published on

உலகக் கோப்பை வரலாற்றில் 500 ரன்கள் மற்றும் 10 விக்கெட் எடுத்தவர் என்ற புதிய சாதனையை பங்களாதேஷ் ஆல்ரவுண்டர் ஷகிப் அல் ஹசன் படைத்துள்ளார். 

உலகக் கோப்பை தொடரில் இந்தியா-பங்களாதேஷ் அணிகள் இடையேயான போட்டி நேற்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றது. இப்போட்டியில் பங்களாதேஷ் அணியின் ஆல்ரவுண்டர் ஷகிப் அல் ஹசன் சிறப்பாக விளையாடினார். அவர் பந்துவீச்சில் ஒரு விக்கெட் வீழ்த்தினார். அத்துடன் பேட்டிங்கில் 66 ரன்கள் எடுத்து அசத்தினார். 

இந்நிலையில் நேற்றைய போட்டியில் 66 ரன்கள் எடுத்ததன் மூலம் ஷகிப் அல் ஹசன் நடப்பு உலகக் கோப்பை தொடரில் 500 ரன்களை கடந்தார். இதன் மூலம் உலகக் கோப்பை வரலாற்றில் 500 ரன்கள் மற்றும் 10 விக்கெட்டுகளுக்கு மேல் எடுத்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்தார். இந்தத் தொடரில் ஷகிப் அல் ஹசன் 7 போட்டிகளில் விளையாடி 542 ரன்கள் மற்றும் 11 விக்கெட் வீழ்த்தியுள்ளார். 

இதற்கு முன்பு 2007ஆம் நடந்த உலகக் கோப்பை தொடரில் நியூசிலாந்தின் ஸ்காட் ஸ்டைரிஸ் 10 போட்டிகளில் விளையாடி 499 ரன்கள் மற்றும் 9 விக்கெட்டுகள் எடுத்ததே சாதனையாக இருந்தது. இந்தச் சாதனையை நடப்பு தொடரில் ஷகிப் முறியடித்துள்ளார். மேலும் இந்த உலகக் கோப்பை தொடரில் ஷகிப் 2 சதம் மற்றும் 5 அரைசதம் அடித்துள்ளார். அத்துடன் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் சிறப்பாக பந்துவீசி 5 விக்கெட்டுகள் வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com