டாக்கா பிரிமியர் லீக் டி20 தொடரில் விதிமுறைகளை மீறி நடுவருடன் வாக்குவாதம் செய்ததுடன், ஸ்டம்புகளை காலால் உதைத்து ஒழுங்கீனமாக நடந்துகொண்ட ஷாகிப் அல் ஹசனுக்கு 4 போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.
வங்காளதேசத்தில் டாக்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் நடைபெறுகிறது. இத்தொடரில், முகமதியன் ஸ்போர்ட்டிங் கிளப் மற்றும் அபஹானி லிமிடெட் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் நடைபெற்றது. முகமதியன் ஸ்போர்ட்டிங் கிளப் அணி கேப்டனும், ஆல்-ரவுண்டருமான ஷாகிப் அல் ஹசன் பந்து வீசியபோது நடுவருடன் வாக்குவாதம் ஏற்பட்டது. இதன்காரணமாக ஆத்திரத்தில் மூன்று ஸ்டம்புகளையும் பிடுங்கி வீசினார். இதேபோல் மழையால் ஆட்டத்தை நிறுத்த நடுவர்கள் எடுத்த முடிவுக்கும் எதிர்ப்பு தெரிவித்த ஷாகிப், கோபத்தில் ஸ்டம்பை எட்டி உதைத்து விட்டுச் சென்றார்.