தொடங்கியது மெஸ்ஸியின் 'கால் வண்ணம்' ! நாக் அவுட் சுற்றுக்கு அர்ஜெண்டினா தகுதி

தொடங்கியது மெஸ்ஸியின் 'கால் வண்ணம்' ! நாக் அவுட் சுற்றுக்கு அர்ஜெண்டினா தகுதி
தொடங்கியது மெஸ்ஸியின் 'கால் வண்ணம்' ! நாக் அவுட் சுற்றுக்கு அர்ஜெண்டினா தகுதி
Published on

உலகக்கோப்பை கால்பந்து தொடரில் நைஜீரியாவை வீழ்த்தி நாக் அவுட் சுற்றுக்கு அர்ஜெண்டினா அணி தகுதி பெற்றுள்ளது.

உலகக்கோப்பை கால்பந்து தொடர் ரஷ்யாவில் நடைப்பெற்று வருகிறது. டி பிரிவில் நடைப்பெற்ற லீக் போட்டியில் அர்ஜெண்டினா - நைஜீரியா அணிகள் மோதின. இந்தப்போட்டி இரு அணிகளுக்கு வாழ்வா? சாவா? போட்டியாக இருந்தது. இந்தப்போட்டியில் வெற்றிபெறும் அணி நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறும் என்பதால் இந்தப்போட்டிக்கு பரபரப்பு இருந்தது. உலக்கோப்பை கைப்பற்றும் என கணிக்கப்பட்ட அர்ஜெண்டினா அணி தனது முதல் ஆட்டத்தில் ஐஸ்லாந்துடன் டிராவும், குரோஷிவிடம் தோல்வி அடைந்திருந்தது. இதனால் அந்த அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் லயோனல் மெஸ்சி மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்தது. இதனால் கட்டாயம் வெற்றிப்பெற வேண்டும் என்ற கட்டாயத்தில் அர்ஜெண்டினா களமிறங்கியது.

இந்தப்போட்டி செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் மைதானத்தில் நடைப்பெற்றது. தொடக்கம் முதலே இரு அணிகளும் வெற்றிக்கு போராடியதால் போட்டி விறுவிறுப்படைந்தது. கடந்த இரண்டு போட்டிகளிலும் ஜொலிக்காத அர்ஜெண்டினா அணியின் கேப்டன் மெஸ்சி ஆட்டத்தின் 14வது நிமிடத்தில் முதல் கோல் அடித்தார். அடுத்து பதில் கோல் அடிக்க நைஜீரியா அணி வீரர்கள் போராடியும் முதல்பாதி ஆட்டம் 1-0 என முடிந்தது. அடுத்ததாக 51வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பு மூலம் நைஜீரியா அணி வீரர் மோசஸ் கோல் அடிக்க போட்டி 1-1 என சமநிலை ஆனது. பின்னர் போட்டியின் இறுதி கட்டத்தில் 86வது நிமிடத்தில் அர்ஜெண்டினாவின் ரோஜோ வெற்றிக்கான கோல் அடித்தார். இதனையடுத்து நைஜீரியா அணி வீரர்கள் போராடியும் கோல் அடிக்க முடியாததால் தோல்வியை தழுவியது. அர்ஜெண்டினா 2-1 என்ற கோல் கணக்கில்  நைஜீரியாவை வீழ்த்தி நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com