2022 டி20 உலகக்கோப்பை தொடரின் இரண்டாவது அரையிறுதிப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பட்லர் பவுலிங்கை தேர்வு செய்தார்.
பல சுவாரசியங்கள், பல டிவிஸ்டுகள், பல வெற்றிகள்-தோல்விகளை கடந்து 2022ஆம் ஆண்டின் டி20 உலகக்கோப்பை தொடர் இறுதி கட்டத்தை அடைந்துள்ளது. யாரும் எதிர்பார்க்காத விதமாக தொடரை விட்டே வெளியேறவிருந்த பாகிஸ்தான் அணி, அரையிறுதிக்குள் நுழைந்து நியூசிலாந்து அணியை எளிதாக வெற்றி பெற்று முதல் அணியாக இறுதிப்போட்டிக்குள் காலடி எடுத்து வைத்திருக்கிறது. டி20 உலகக்கோப்பையின் இரண்டாவது அரையிறுதி போட்டி இன்று அடிலெய்டு மைதானத்தில் மதியம் 1.30 மணிக்கு இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையே நடைபெறவிருக்கிறது.
இந்நிலையில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பட்லர் ப்வுலிங்கை தேர்வு செய்தார். இந்திய அணியில் விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் பதிலாக ரிஷப் பண்ட் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இதுவரை இரு அணிகளும் 22 முறை டி20 போட்டிகளில் மோதியுள்ள நிலையில், இந்திய அணி 12 முறையும், இங்கிலாந்து அணி 10 முறையும் வெற்றி பெற்றுள்ளன. இதனால் இந்த அரையிறுதி போட்டி விறுவிறுப்புகளுக்கு பஞ்சம் இல்லாத வகையில் இருக்கும் என்ற நிலையில், ரசிகர்களிடையே பலத்த எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.