‘நீங்கள் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் அவர் ஒரு சாலிட் பேட்ஸ்மேன்’ ரஹானேவை புகழும் சேவாக் ! 

‘நீங்கள் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் அவர் ஒரு சாலிட் பேட்ஸ்மேன்’ ரஹானேவை புகழும் சேவாக் ! 
‘நீங்கள் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் அவர் ஒரு சாலிட் பேட்ஸ்மேன்’ ரஹானேவை புகழும் சேவாக் ! 
Published on

‘டி20 போட்டிகளில் ரஹானே பெரிய ஷாட்களை ஆடமாட்டார் என சொல்வது உண்டு. அவர் ஒரு சாலிட் பேட்ஸ்மேன்’ என தெரிவித்துள்ளார் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி பேட்ஸ்மேன் வீரேந்திர சேவாக்.

நேற்று அபுதாபியில் நடைபெற்ற டெல்லி கேபிடல்லஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வென்று அசத்தியது டெல்லி அணி. 

அந்த அணியின் வெற்றிக்கு அடித்தளம் அமைத்து கொடுத்தவர் பேட்ஸ்மேன் ரஹானே. 46 பந்துகளில் 60 ரன்களை எடுத்திருந்தார் அவர்.

இந்நிலையில், ரஹானேவை சாலிட் பேட்ஸ்மேன் என புகழ்ந்துள்ளார் சேவாக்.

“அவரை சில டி20 வீரர்கள் ஏற்றுக் கொள்வதில்லை. பவுண்டரிகளை அவர் அடிக்க தவறுவதே அதற்கான காரணமாக சுட்டிக்காட்டுவது உண்டு. ஆனால் ரஹானே ஒரு சாலிட் பேட்ஸ்மேன். களத்தில் நிலைத்து நின்று விளையாடக் கூடியவர். அவர் ஆடும் போது எதிர் திசையில் உள்ள பேட்ஸ்மேன்கள் அடித்து ஆடும் டாஸ்க்கை செய்யலாம். 

ரஹானேவும், பிருத்வி ஷாவும் தொடர்ந்து சொதப்பிக் கொண்டிருக்கின்ற போது கடினமான முடிவினை எடுத்தார் டெல்லியின் தலைமை பயிற்சியாளர் பாண்டிங். 

இருவருக்கும் தொடர்ந்து வாய்ப்புகள் கொடுத்தார். அதை சரியாக பயன்படுத்தி ரஹானே மேட்ச் வின்னிங் இன்னிங்க்ஸை கொடுத்துவிட்டார். 

வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் டெல்லி நேற்று வென்று காட்டியது” என சேவாக் தெரிவித்துள்ளார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com