பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் டெஸ்ட் கேப்டன் பொறுப்பில் இருந்து சர்ஃபராஸ் அகமது நீக்கப்பட்டுள்ளார்.
இங்கிலாந்தில் நடந்த உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில், லீக் சுற்று முடிவிலேயே பாகிஸ்தான் அணி வெளியேறியது. இதையடுத்து அணியின் செயல்பாடுகள் குறித்து, அந்நாட்டு கிரிக்கெட் அணி மேலாளர் வாசிம் கான் விவாதித்தார். அப்போது கேப்டன் சர்ஃபராஸ் அகமதுவை மாற்றிவிட்டு, டெஸ்ட் போட்டி கேப்டனாக பாபர் அசாமை நியமிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. இந்நிலையில் பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் மாற்றப்பட்டார். சர்ஃபராஸ் அகமதுவும் மாற்றப்படுவார் என்று கூறப்பட்டது.
(அசார் அலி)
இதற்கிடையே சமீபத்தில் இலங்கை அணி, பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது. அந்த தொடருக்கான கேப்டனாக சர்ஃபராஸையே நியமித்து அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்தது. துணை கேப்டனாக பாபர் ஆசம் நிய மிக்கப்பட்டார்.
இந்நிலையில், டெஸ்ட் கேப்டன் பொறுப்பில் இருந்து சர்ஃபராஸ் அகமது திடீரென்று நீக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக, அசார் அலி டெஸ்ட் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். டி-20 கேப்டனாக பாபர் ஆசம் நியமிக்கப்பட்டுள்ளார்.
டெஸ்ட் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள அசார் அலி, 73 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, 5669 ரன்கள் குவித்துள்ளார். இதில் 15 சதமும் 31 அரைசதமும் அடங்கும்.