சஞ்சய் கொஞ்சம் மும்பை தாண்டி வாங்க - கே.எல் ராகுல் குறித்த கருத்துக்கு ஸ்ரீகாந்த் பதிலடி

சஞ்சய் கொஞ்சம் மும்பை தாண்டி வாங்க - கே.எல் ராகுல் குறித்த கருத்துக்கு ஸ்ரீகாந்த் பதிலடி
சஞ்சய் கொஞ்சம் மும்பை தாண்டி வாங்க - கே.எல் ராகுல் குறித்த கருத்துக்கு ஸ்ரீகாந்த் பதிலடி
Published on

இந்தியா ஆஸ்திரேலியா இடையே நடக்க இருக்கும் டெஸ்ட் போட்டிகளுக்கு கே.எல்.ராகுல் தேர்வு செய்யப்பட்டது குறித்து வினவிய முன்னாள் இந்திய வீரர் சஞ்சய் மஞ்ச்ரேகருக்கு கிரிஷ் ஸ்ரீகாந்த் பதிலளித்துள்ளார்.

இந்தியா ஆஸ்திரேலியா இடையே நடக்க இருக்கும் டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகள் அடுத்த மாதம் 27 ஆம் தேதியன்று தொடங்க இருக்கின்றன. காயம் காரணமாக ரோகித் ஷர்மா அணியில் இடம்பெற வில்லை.

இந்நிலையில் டெஸ்ட் போட்டிகளுக்கு கே.எல்.ராகுல் தேர்வு செய்யப்பட்டது குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் இந்திய வீரர் சஞ்சய் மஞ்ச்ரேகர்  “ஐபிஎல் போட்டிகளில் நல்ல செயல்திறனை வெளிப்படுத்தியதின் அடிப்படையில், அந்த வீரரை டெஸ்ட் போட்டிக்கான அணியில் இடம்பெறச் செய்ததின் வாயிலாக மோசமான முன்னுதாரணம் நிகழ்த்தப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக நடந்த டெஸ்ட் போட்டிகளில் அந்த வீரரின் செயல்திறன் மிக மோசமாக அமைந்திருந்தது. ஆகையால் இவ்வகையான தேர்வானது நிச்சயமாக ரஞ்சி கிரிக்கெட் வீரர்கள் மத்தியில் தாழ்வு மனப்பான்மையை உருவாக்கும்” என்று கூறினார்

மற்றொரு கருத்துப்பதிவில் “கடந்த டெஸ்ட்போட்டிகளில் கே.எல் ராகுலின் செயல்திறனை அட்டவணைப்படுத்திய அவர் ஐபில் போட்டிகளில் ராகுல் வெளிப்படுத்திய செயல்திறனைக் கொண்டு அவர் டெஸ்ட் போட்டிகளுக்கு தேர்வு செய்யப்பட்டதன் வாயிலாக அவர் மிக அதிர்ஷ்டம் வாய்ந்த வீரராக மாறியுள்ளார். ஆனால் இந்த வாய்ப்பை அவர் சரிவர பயன்படுத்துவார் என நம்புவோம் என பதிவிட்டார்.”

இந்த பதிவுகளுக்கு தனது யூடியூப் சேனல் வழியாக பதிலளித்துள்ள இந்திய அணியின் முன்னாள் வீரர் ஸ்ரீகாந்த் “சஞ்சய் மஞ்ச்ரேகருக்கு வேறு வேலையில்லை. ராகுல் டெஸ்ட் போட்டிகளில் நன்றாகவே விளையாடியிருக்கிறார். ஆகையால் அவர் கூறிய கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை.

சர்ச்சையை ஏற்படுத்துவதற்காக, கேள்விகளை முன்வைக்க கூடாது. ராகுல் தொடர்ச்சியாக நன்றாக விளையாடாமல் இருந்திருக்கலாம். ஆனால் ஆஸ்திரேலியா அணியுடனா முதல் போட்டியில் சதம் அடித்தார். வேகப்பந்து வீச்சாளர்களை எதிர்கொள்வதில் ராகுல் வல்லவர். இங்கு பிரச்னை என்னெவென்றால் சஞ்சய் மும்பையைத் தாண்டி சிந்திப்பதில்லை. நாங்கள் சம வாய்ப்பை பற்றி பேசுகிறோம். ஆனால் அவரோ மும்பையைத் தாண்டி வர மறுக்கிறார். அவர்கள் போன்ற வீரர்களுக்கு மும்பை சேர்ந்த வீரர்கள் மீது மட்டும்தான் கவனம் இருக்கிறது. அவர்கள் சற்று மும்பையை தாண்டி வரவேண்டும்.” என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com