ஆர்சிபி பேட்டிங் ஆலோசகரானார் சஞ்சய் பாங்கர்!

ஆர்சிபி பேட்டிங் ஆலோசகரானார் சஞ்சய் பாங்கர்!
ஆர்சிபி பேட்டிங் ஆலோசகரானார் சஞ்சய் பாங்கர்!
Published on

இந்திய அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் சஞ்சய் பாங்கர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் பேட்டிங் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்தாண்டு ஐபிஎல் போட்டிகள் வருகின்ற ஏப்ரல்-மே மாதங்களில் நடைபெற இருக்கிறது. இந்நிலையில், வரும் 18 ஆம் தேதி சென்னையில் ஐபிஎல் வீரர்களை தேர்வு செய்யும் ஏலமும் நடைபெற இருக்கிறது. ஏலம் தொடங்வதற்கு முன்பாகவே ஐபிஎல் அணிகள் 57 வீரர்களை ஏற்கெனவே விடுவித்தது. அது மட்டுமல்லாமல் ஒவ்வொரு அணிகளும் பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறது.

இந்நிலையில், ஆர்சிபி அணி தங்களது அணியின் புதிய பேட்டிங் ஆலோசகராக சஞ்சய் பாங்கரை நியமித்து இருக்கிறது. சஞ்சய் பாங்கர் ஏற்கெனவே இந்திய அணிக்கு பேட்டிங் பயிற்சியாளராக இருந்துள்ளார். 2014 இல் இந்திய அணிக்கு பேட்டிங் பயிற்சியாளரான சஞ்சய் பாங்கர் 2019 உலகக் கோப்பை வரை நீடித்தார். அதன் பின்பு இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளராக விக்ரம் ரத்தோர் நியமிக்கப்பட்டார்.

இந்தியாவுக்காக 12 டெஸ்ட் போட்டிகளிலும் 15 ஒருநாள் போட்டிகளிலும் சஞ்சய் பாங்கர் விளையாடியுள்ளார். ரயில்வே அணிக்காக முதல்தர போட்டிகளில் விளையாடிய அவர் மொத்தம் 8349 ரன்களும், 13 சதங்கள், 43 அரை சதங்களும் விளாசியுள்ளார். மேலும் 300 விக்கெட்டுகளையும் அவர் கைப்பற்றியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com