ஹோபர்ட் டென்னிஸ் போட்டி: சாம்பியன் பட்டம் வென்றது சானியா மிர்சா ஜோடி

ஹோபர்ட் டென்னிஸ் போட்டி: சாம்பியன் பட்டம் வென்றது சானியா மிர்சா ஜோடி
ஹோபர்ட் டென்னிஸ் போட்டி: சாம்பியன் பட்டம் வென்றது சானியா மிர்சா ஜோடி
Published on

ஹோபர்ட் சர்வதேச டென்னிஸ் போட்டியில், இந்தியாவின் சானியா மிர்சா ஜோடி சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது.

மொத்தம் ரூ.1.94 கோடி பரிசுத் தொகைக்கான ஹோபர்ட் சர்வதேச டென்னிஸ் போட்டி, ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. காயம் மற்றும் குழந்தை பேறு காரணமாக கடந்த 2017-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நடந்த சீன ஓபன் டென்னிஸ் போட்டிக்கு பிறகு முதல்முறையாக களம் கண்ட இந்திய நட்சத்திர வீராங்கனை சானியா மிர்சா, உக்ரைன் வீராங்கனை நாடியா கிச்செனோக்குடன் இணைந்து பெண்கள் இரட்டையர் பிரிவில் பங்கேற்றார்.

முதல் சுற்றில் ஒக்சனா கலாஷ்னிகோவா (ஜார்ஜியா)-மியூ கட்டோ (ஜப்பான்) இணையை வீழ்த்திய சானியா மிர்சா-நாடியா கிச்செனோக் ஜோடி காலிறுதி ஆட்டத்தில் அமெரிக்காவின் வானியா கிங் - கிறிஸ்டினா மெக்ஹாலே இணையை எதிர்கொண்டது. 1 மணி நேரம் 24 நிமிடங்கள் நீடித்த விறுவிறுப்பான இந்த ஆட்டம் டைபிரேக்கர் வரை சென்றது. டைபிரேக்கரில் ஆதிக்கம் செலுத்திய சானியா மிர்சா-நாடியா கிச்செனோக் ஜோடி 6-2, 4-6, 10-4 என்ற செட் கணக்கில் வானியா கிங்- கிறிஸ்டினா மெக்ஹாலே கூட்டணியை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தது.

அரைஇறுதி ஆட்டத்தில் 33 வயதான சானியா மிர்சா ஜோடி, தமரா ஜிடான்செக் (சுலோவேனியா) - மேரி போஸ்கோவா (செக்குடியரசு) இணையை நேற்று சந்தித்தது. இதில் 7-6, 6-2 என்ற செட் கணக்கில் வெற்றிப் பெற்று ஹோபர்ட் டென்னிஸ் போட்டியின் இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது. இதனையடுத்து இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் சீனாவின் ஜாங் - பெங் ஜோடியை, சானியா ஜோடி எதிர்கொண்டது. இதில் 6-4 6-4 என்ற நேர் செட் கணக்கில் வெற்றிப் பெற்று ஹோபர்ட் சர்வதேச டென்னிஸ் கோப்பையை கைப்பற்றியது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com