ஐபிஎல் 2017: சாமுவேல் பத்ரி ஹாட்ரிக்

ஐபிஎல் 2017: சாமுவேல் பத்ரி ஹாட்ரிக்
ஐபிஎல் 2017: சாமுவேல் பத்ரி ஹாட்ரிக்
Published on

பத்தாவது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வீரர் சாமுவேல் பத்ரி, ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.

மும்பை அணிக்கு எதிரான போட்டியில், மூன்றாவது ஓவரில் பார்த்திவ் படேல், மெக்னல்கன், ரோகித் ஷர்மா ஆகியோரை ஆட்டமிழக்கச் செய்தார். ஐபிஎல் கிரிக்கெட்டில், ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய 12ஆவது வீரர் என்ற சிறப்பை பத்ரி பெற்றுள்ளார். 4 ஓவர்கள் பந்துவீசிய சாமுவேல் பத்ரி, 9 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்களைக் கைப்பற்றினார். ஐபிஎல் போட்டிகளில் இது‌வரை 15 முறை ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தப்பட்டுள்ளன. அதிகபட்சமாக அமித் மிஸ்ரா, 3 முறை ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி இருக்கிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com