காமன்வெல்த் மல்யுத்த போட்டியில் தங்கம் வென்றார் சாக்‌ஷி மாலிக்

காமன்வெல்த் மல்யுத்த போட்டியில் தங்கம் வென்றார் சாக்‌ஷி மாலிக்
காமன்வெல்த் மல்யுத்த போட்டியில் தங்கம் வென்றார் சாக்‌ஷி மாலிக்
Published on

காமன்வெல்த் மல்யுத்த போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த சாக்‌ஷி மாலிக் தங்கம் வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார். 

தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் இந்தியாவைச் சேர்ந்த பல வீரர்கள் கலந்துக் கொண்டு
விளையாடி வருகின்றனர். இதில் நேற்று நடைப்பெற்ற 62 கிலோ எடைப்பிரிவுக் கொண்ட மல்யுத்த போட்டியில் ஒலிம்பிக புகழ் சாக்‌ஷி மாலிக்,
நியூசிலாந்து வீராங்கனை டைலா டுவைனை எதிர்க் கொண்டார். ஆரம்பத்தில் இருந்தே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சாக்‌ஷி 13- 2 என்ற
கணக்கில் நியூசிலாந்து வீராங்கனையை வீழ்த்தி வெற்றியை வசப்படுத்தி தங்கம் வென்றார்.
 
காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற சாக்‌ஷிக்கு சாய்னா, விஜேந்தர் சிங் போன்ற விளையாட்டு வீரர்கள் பலர் தங்களின் வாழ்த்துகளை
ட்விட்டரில் தெரிவித்து வருகின்றனர். முன்னதாக நடைபெற்ற ஆண்கள் பிரிவுக்கான 74 கிலோ எடைப்பிரிவுக் கொண்ட போட்டியில் இந்தியாவின்
சுஷில் குமார் 8-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று தங்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com