இந்தோனேஷிய ஓபன் பேட்மிண்டன் - பட்டம் வென்றார் சாய்னா

இந்தோனேஷிய ஓபன் பேட்மிண்டன் - பட்டம் வென்றார் சாய்னா
இந்தோனேஷிய ஓபன் பேட்மிண்டன் - பட்டம் வென்றார் சாய்னா
Published on

இந்தோனேஷிய மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி ஜகர்தாவில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் இந்தியாவின் நட்சத்திர பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் பெண்கள் ஒற்றையர் பிரிவில் கலந்து கொண்டார். சாய்னா நிச்சயம் சாம்பியன் பட்டம் வெல்வார் என விளையாட்டு விமர்சகர்கள் கருத்து தெரிவித்த நிலையில் அரையிறுதி போட்டியில் சீனாவின் ஹீ பிங்ஜாவை எதிர்த்து சாய்னா விளையாடினார். இதில் சாய்னா நேவால் 18–21, 21–12, 21–18 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். 

அரையிறுதிப்போட்டியில் வெற்றி பெற்றதை அடுத்து, இறுதிப்போட்டியில் ஸ்பெயின் வீராங்கனை கரோலினா மரினை சந்தித்தார். போட்டி தொடங்கி தனது ஆக்ரோஷமான விளையாட்டை கரோலினாவும் - சாய்னாவும் வெளிப்படுத்தினர். ஆரம்பம் முதலே கரோலினா நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். முதல் செட்டில் மரின் 10-4 என முன்னணியில் இருந்த போது திடீரென்று காயத்தினால் பாதிக்கப்பட்டார் கரோலினா. சில நிமிடங்கள் ஓய்வுக்கு பின் மீண்டும் விளையாட்டை தொடங்கி அவரால் தொடர்ந்து விளையாட முடியவில்லை. 

வலியால் கதறி அழுத கரோலினா விளையாட முடியாத நிலையில் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதனையடுத்து எதிர் முனையில் விளையாடிய சாய்னா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இருவரும் சமமான ஆக்ரோஷ வீராங்கனைகள் என்பதால் இன்றைய இறுதி போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என பேட்மிண்டன் ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், கரோலினாவின் காயம் காரணமாக மிகச்சாதாரணமாக பெண்கள் ஒற்றையர் ஆட்டம் முடிவடைந்தது.

இந்த போட்டியையும் சேர்த்து சாய்னா - கரோலினா இருவரும் இதுவரை 12 முறை நேருக்கு நேர் சந்தித்து, அதில் 6 முறை சாய்னாவும், 6 முறை கரோலினாவும் வெற்றி பெற்றுள்ளனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com