"சச்சின் இப்போது விளையாடியிருந்தால் 1 லட்சம் ரன்களை குவித்திருப்பார்" - அக்தர் !

"சச்சின் இப்போது விளையாடியிருந்தால் 1 லட்சம் ரன்களை குவித்திருப்பார்" - அக்தர் !
"சச்சின் இப்போது விளையாடியிருந்தால் 1 லட்சம் ரன்களை குவித்திருப்பார்"  - அக்தர் !
Published on

ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் இப்போது விளையாடியிருந்தால் சர்வதேச அளவில் 1 லட்சம் ரன்களை குவித்திருப்பார் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஷோயப் அக்தர் தெரிவித்துள்ளார்.

சர்வதேச கிரிக்கெட்டில் அதிவேக பந்துவீச்சாளராகத் திகழ்ந்தவர் ஷோயப் அக்தர். கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்ற பின்பு வர்ணனையாளராகவும் இருந்து வருகிறார். ஆனால் அவ்வப்போது தொலைக்காட்சிகளில் தோன்றி கிரிக்கெட் தொடர்பான சர்ச்சை கருத்துகளை வெளியிட்டு வருவார்.

அண்மைக் காலமாகவே இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரையும், தற்போதைய இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியையும் ஒப்பீடு செய்வது வழக்கமாக உள்ளது. இப்போது வரை சர்வதேச கிரிக்கெட் அரங்கில் அதிகச் சதம், அதிக ரன்கள் என பெரும் சாதனையாளராகவே திகழ்கிறார் சச்சின். ஆனால் கோலி இப்போதுதான் சச்சின் சாதனைகளை நெருங்கி வருகிறார். அதனால் சமூகவலைத்தளங்களில் இவர்கள் இருவரையும் ஒப்பிட்டுப் பதிவுகள் அதிகமாய் வரத் தொடங்கியுள்ளன.

இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஷோயப் அக்தர் இணையதளம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் இந்த ஒப்பீடு தொடர்பாகக் கருத்து தெரிவித்துள்ளார், அதில் " சச்சின் டெண்டுல்கர் விளையாடிய காலகட்டம் என்பது மிகவும் கடினமானது. அவருக்கு இப்போது வாய்ப்பு கிடைத்தால் 1 லட்சத்து 30 ஆயிரம் ரன்களை அடித்துக் குவித்திருப்பார். எனவே சச்சின் டெண்டுல்கருடன், விராட் கோலியை ஒப்பிடுவதே சரியானதாக இருக்காது" எனத் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com