எவ்வாறு தொடக்க ஆட்டக்காரர் ஆனேன் ?- மனம் திறந்த சச்சின் டெண்டுல்கர்

எவ்வாறு தொடக்க ஆட்டக்காரர் ஆனேன் ?- மனம் திறந்த சச்சின் டெண்டுல்கர்
எவ்வாறு தொடக்க ஆட்டக்காரர் ஆனேன் ?- மனம் திறந்த சச்சின் டெண்டுல்கர்
Published on

நான் போராடி கெஞ்சி தான் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கினேன் என்று இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் வீரர் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார். 

இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் வீரர் சச்சின் டெண்டுல்கர். இவர் 1994ஆம் ஆண்டு நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் போட்டியில் முதல் முறையாக தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கினார். இதற்குமுன்பு அவர் நடுகள வரிசையில் விளையாடி வந்தார். இந்தப் போட்டி முதல் அவர் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கினார். 

இந்நிலையில் தனது சமூகவலைத்தளத்தில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்க அவர் செய்தது குறித்து வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், “1994ஆம் ஆண்டு நான் முதல் முறையாக தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய போது அப்போது இருந்த அணிகள் தொடக்கத்தில் விக்கெட் இழக்காமல் விளையாடுவதை யுக்தியாக வைத்திருந்தனர். ஆனால் இதிலிருந்து மாறுபட்ட யுக்தியை கையாள நினைத்தேன். அதாவது ஆட்டத்தின் தொடக்கம் முதலே நான் பந்துவீச்சாளர்களின் பந்துகளை அடித்து விளையாடவேண்டும் என்று நினைத்தேன். 

எனினும் நான் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்க மிகவும் போராடினேன். அத்துடன் அணி நிர்வாகத்திடம் எனக்கு தொடக்க வீரராக களமிறங்க ஒரு வாய்ப்பு கொடுங்கள் என்று மிகவும் கெஞ்சினேன். நான் இந்த முயற்சியில் தோல்வி அடைந்தால் மீண்டும் உங்களிடம் வந்து வாய்ப்பு கேட்க மாட்டேன் எனக் கூறினேன். எனக்கு வாய்ப்பு கிடைத்த முதல் போட்டியில் நான் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி 49 பந்துகளில் 82 ரன்கள் அடித்தேன். அதற்கு பிறகு நான் வாய்ப்பு கேட்கவில்லை. அவர்களே என்னை தொடக்க ஆட்டக்காரராக களமிறக்கினர். இதன்மூலம் நான் கூறு வருவது எப்போதும் தோல்வியை கண்டு பயப்படாதீர்கள் என்பதுதான்” எனப் பேசியுள்ளார். 

சச்சின் டெண்டுல்கர் 463 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 49 சதங்கள் உட்பட 18426 ரன்கள் அடித்துள்ளார். இவர் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய முதல் ஐந்து போட்டிகளில் 82,63,40,63,73 ரன்கள் எடுத்தார். இதன்பின்னர் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரராக சச்சின் டெண்டுல்கர் தனது ஓய்வு வரை விளையாடியது குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com