இந்திய கிரிக்கெட் அணியின் புதிய ஸ்பான்சராக ஒப்போ நிறுவனம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதை தடுக்கக் கோரி ஆர்.எஸ்.எஸ். சார்பு இயக்கமான மன்ச் சார்பில் மத்திய அரசிரடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் தயாரிக்கப்படும் பொருட்களையும், இந்திய நிறுவனங்களையும் ஊக்கப்படுத்த வேண்டும் என்று வாதிடும் மன்ச் அமைப்பு, மத்திய விளையாட்டு துறை அமைச்சர் விஜய் கோயலை சந்திக்க நேரம் கேட்டுள்ளது. அப்போது மத்திய அரசு தலையிட்டு சீன நிறுவனமான ஒப்போ இந்திய கிரிக்கெட் அணியின் புதிய ஸ்பான்சராவதை தடுக்க வேண்டும் என வலியுறுத்தத் அந்த அமைப்பு திட்டமிட்டுள்ளது.
’சீன நிறுவனங்களும், சீன பொருட்கள் இறக்குமதியும் நமக்கு வணிக ரீதியாக பெரிய சவால். சீன பொருட்கள் நமது நாட்டின் பாதுகாப்புக்கும் நல்லதல்ல. தற்போது இந்தியாவில் மிக அதிகமான ரசிகர்களைக் கொண்ட விளையாட்டான கிரிக்கெட்டின் ஸ்பான்சராக ஒரு சீன நிறுவனம் தேர்வாகியுள்ளது அந்நிறுவனத்தின் வாடிக்கையாளர்களை பல மடங்கு அதிகரிக்கும்’ என மன்ச் அமைப்பின் நிறுவாகிகள் கூறியுள்ளனர். இதன் மூலம் ஒப்போ நிறுவனத்தின் லோகோவை உடைய ஜெர்சியை இந்திய ஆடவர் மற்றும் மகளிர் அணியின் வீரர்கள் அனைத்து போட்டிகளிலும் பயன்படுத்துவர் என்பது குறிப்பிடத்தக்கது.