டாஸை வென்ற ராஜஸ்தான் அணி பீல்டிங் செய்தது.
முதலில் பேட் செய்த பஞ்சாப் இருபது ஓவர் முடிவில் 223 ரன்களை குவித்தது.
பஞ்சாப் அணியின் ஓப்பனர்கள் கேப்டன் கே.எல் ராகுலும், மயங் அகர்வாலும் முதல் விக்கெட்டிற்கு 183 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்திருந்தனர். மயங் அகர்வால் 50 பந்துகளில் 106 ரன்களை குவித்து சதம் விளாசியிருந்தார்.
பெரிய இலக்கை விரட்டிய ராஜஸ்தானுக்கு ஆரம்பமே சறுக்கலாக அமைந்தது. பட்லர் 4 ரன்களில் வெளியேற ஸ்மித், சாம்சன் மற்றும் ராகுல் திவாட்டியா அரை சதம் கடந்திருந்தனர். அதில் ராகுல் திவாட்டியாவின் ஆட்டம் பஞ்சாப்புக்கு கிலி கொடுத்திருக்கும்.
19.3 ஓவர்களில் 226 ரன்களை சேர்த்து ஐபிஎல் போட்டிகளில் அதிக ரன்களை சேஸ் செய்த அணி என்ற வரலாற்றை படைத்தது ராஜஸ்தான்.