அபுதாபியில் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் சீசனின் 50வது லீக் ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் விளையாடி வருகின்றன.
டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ஸ்மித் பவுலிங் தேர்வு செய்தார். இதனையடுத்து கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்தது. கேப்டன் கே.எல்.ராகுலும், மந்தீப் சிங்கும் இன்னிங்க்ஸை ஓப்பன் செய்தனர்.
சிறப்பான தொடக்கத்தை கொடுப்பார்கள் என எதிர்பார்த்த நிலையில், ஆர்ச்சர் வீசிய முதல் ஓவரின் கடைசி பந்திலேயே மந்தீப் விக்கெட்டை இழந்தார்.
பின்னர் இரண்டாவது ஓவரில் களம் இறங்கிய கிறிஸ் கெயிலுடன் இணைந்து சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைத்தார் ராகுல். கெயில் அடித்து விளையாட, ராகுல் அடக்கி வாசித்தார்.
121 ரன்களுக்கு இருவரும் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். ராகுல் 46 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார்.
தொடர்ந்து களம் இறங்கிய பூரன் 10 பந்துகளில் 22 ரன்களை விளாசினார்.
கெயில் 63 பந்துகளில் 99 ரன்களை எடுத்தார். சதம் விளாசுவார் என எதிர்பார்த்த நிலையில் ஆர்ச்சர் பந்தில் போல்டானார்.
இருபது ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 185 ரன்களை பஞ்சாப் சேர்த்தது.
இந்த சீசனில் பெரிய டார்கெட்டை வெற்றிகரமாக சேஸ் செய்துள்ள ராஜஸ்தான் இந்த ஆட்டத்தில் அதை செய்கிறதா என்பதை இரண்டாவது இன்னிங்ஸில் பார்க்கலாம்.