8 விக்கெட் அள்ளினார் சேஸ்: இங்கிலாந்து அணி பரிதாப தோல்வி!

8 விக்கெட் அள்ளினார் சேஸ்: இங்கிலாந்து அணி பரிதாப தோல்வி!
8 விக்கெட் அள்ளினார் சேஸ்: இங்கிலாந்து அணி பரிதாப தோல்வி!
Published on

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி, அபார வெற்றி பெற்றுள்ளது. அந்த அணியின் பந்துவீச்சாளர் ரோஸ்டர் சேஸ் 8 விக்கெட்டுகள் வீழ்த்தினார். 

இங்கிலாந்து அணி, வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பிரிட்ஜ்டவுனில் நடந்து வந்தது. முதல் இன்னிங்சில் வெஸ்ட் இண்டீஸ் அணி, 289 ரன்களில் ஆட்டம் இழந்தது. அதிகப்பட்சமாக ஹெட்மையர் 81 ரன் எடுத்தார். இங்கிலாந்து தரப்பில், ஆண்டர்சன் 5 விக்கெட்டுகளும் பென் ஸ்டோக்ஸ் 4 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து, யாரும் எதிர்பார்க்காத வகையில் 77 ரன்னுக்கு அனைத்து விக்கெட் டையும் இழந்தது. வெஸ்ட் இண்டீஸின் கெமர் ரோச் 27 பந்துகளில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி மிரட்டினார். இந்த மைதானத் தில் ஒரு அணியின் மோசமான ஸ்கோர் இது.

அடுத்து 212 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியில், 8வது வீரராக களமிறங்கிய அந்த அணியின் கேப்டன் ஜேசன் ஹோல்டர் இரட்டை சதம் அடித்தார். அவர் 229 பந்துகளில் 8 சிக்சர், 23 பவுண்டர்களுடன் 202 ரன் குவித்தார். எட்டாவது வரிசையில் இரட்டை சதம் கண்ட சாதனையாளர்களின் பட்டியலில் அவர் 3 வது வீரராக இணைந்தார்.

(சேஸ்)

அவருக்கு துணையாக நின்ற விக்கெட் கீப்பர் டாவ்ரிச் 116 ரன்கள் எடுத்தார். இதையடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணி, 415 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. பின்னர் இரண்டாவது இன்னிங்ஸை இங்கிலாந்து அணி தொடங்கியது. 

நிதானமாக ஆடிய அந்த அணியால், ரோஸ்டன் சேஸின் அபார பந்துவீச்சுக்கு முன் தாக்குபிடிக்க முடியவில்லை. விக்கெட்டு களை மளமளவென இழந்தனர். இதனால் 246 ரன்னுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்து தோல்வியை தழுவியது.

இதைய டுத்து வெஸ்ட் இண்டீஸ் அணி, 381 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வெஸ்ட் இண்டீஸ் சுழல் பந்துவீச்சாளர் ரோஸ்டன் சேஸ் 8 விக்கெட்டுகளை அள்ளினார். 

இரட்டை சதம் விளாசிய வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஜேசன் ஹோல்டருக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com