இந்திய வீரர் ரோகித் சர்மா ஒரே ஆண்டில் உலக அளவில் அதிக சிக்ஸர் அடித்த வீரர் என்ற புதிய சாதனையை படைத்துள்ளார்.
இலங்கைக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் அதிரடியாக விளையாடி ரோகித் சதம்(118) அடித்தார். அதில் 10 சிக்ஸர்கள் விளாசி இருந்தார். இதோடு 2017-ம் ஆண்டில் ரோகித் சர்மா 64 சிக்ஸர்கள் அடித்து இருந்தார். அதுவரை உலக அளவில் தென் ஆப்பிரிக்க அணியின் டிவில்லியர்ஸ் 2015-ம் ஆண்டி 63 சிக்ஸர்கள் அடித்ததே சாதனையாக இருந்தது.
இதனையடுத்து, டிவில்லியர்ஸின் சாதனையை ரோகித் சர்மா முறியடித்துள்ளார். இலங்கை அணிக்கு எதிராக இன்று நடைபெற்ற மூன்றாவது டி20 போட்டியில் ஒரு சிக்ஸர் அடித்தார். இதோடு, இந்த ஆண்டில் அவர் 65 சிக்ஸர்கள் விளாசியுள்ளார். இந்திய அணியை பொருத்தவரை ரோகித் சர்மாவுக்கு அடுத்தபடியாக சச்சின் டெண்டுல்கர் 1998-ம் ஆண்டில் 52 சிக்ஸர்கள் அடித்துள்ளார்.
டி20 கிரிக்கெட் வரலாற்றில் இந்திய அணியை பொருத்தவரை ஒரு இன்னிங்சில் யுவராஜ் சிங் அடித்த 7 சிக்ஸர்கள் தான் சாதனையாக இருந்தது. கடந்த போட்டியில் 10 சிக்ஸர்கள் அடித்ததன் மூலம் அதனை ரோகித் கடந்தார்.