"ஹிட்மேன்" ரோகித் சர்மா அதிரடி: 10 ஓவரில் 92 ரன்கள் குவித்த இந்தியா

"ஹிட்மேன்" ரோகித் சர்மா அதிரடி: 10 ஓவரில் 92 ரன்கள் குவித்த இந்தியா
"ஹிட்மேன்" ரோகித் சர்மா அதிரடி: 10 ஓவரில் 92 ரன்கள் குவித்த இந்தியா
Published on

நியூசிலாந்துக்கு எதிராக ஹாமில்டனில் நடைபெற்று வரும் மூன்றாவது டி20 போட்டியில் அதிரடியாக விளையாடிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா அரை சதமடித்தார்.

இந்திய அணி நியூசிலாந்து நாட்டில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது. இந்தத் தொடரில் 5 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் இரு அணிகளும் மோதுகின்றன. ஆக்லாந்தில் நடைபெற்ற முதல் இரண்டு டி20 போட்டிகளில் இந்தியா அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 2-0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலையில் உள்ளது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் முதலில் பவுலிங் செய்ய தீர்மானித்தார். இதனையடுத்து இந்தியா முதலில் பேட்டிங் செய்து வருகிறது. இந்த ஆட்டத்தில் தொடக்கத்தில் இருந்து அதிரடியாக விளையாடிய ரோகித் சர்மா 24 பந்துகளில் அரை சதம் கடந்து விளையாடி வருகிறார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான கே.எல்.ராகுலும் நிதானமாகவும் அதேசமயம் அதிரடியாகவும் ரன்களை சேர்த்து ஆடினார். பின்னர்  கே.எல்.ராகுல் 27 ரன்களில் ஆட்டமிழந்தார். 10 ஓவர்கள் முடிவில் இந்தியா 1 விக்கெட் இழப்பிற்கு 92 ரன்கள் குவித்துள்ளது. ரோகித் சர்மா 64 ரன்களும், ஷிவம் துபே ரன் ஏதும் எடுக்காமல் களத்தில் உள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com