"ரோகித் சர்மா தன்னுடைய பேட்டிங் ஸ்டைலை மாற்றக் கூடாது"- ஸ்ரீகாந்த்

"ரோகித் சர்மா தன்னுடைய பேட்டிங் ஸ்டைலை மாற்றக் கூடாது"- ஸ்ரீகாந்த்
"ரோகித் சர்மா தன்னுடைய பேட்டிங் ஸ்டைலை மாற்றக் கூடாது"- ஸ்ரீகாந்த்
Published on

ரோகித் சர்மா டெஸ்ட் போட்டிக்காக தன்னுடைய வழக்கமான பேட்டிங் ஸ்டைலை மாற்றக்கூடாது என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கிருஷ்ணமச்சாரி ஸ்ரீகாந்த் கூறியுள்ளார்.

சென்னையில் இங்கிலாந்துடனான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா 277 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2 ஆவது டெஸ்ட் போட்டி நாளை சேப்பாக்கத்தில் தொடங்குகிறது. முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டு இன்னிங்ஸிலும் ரோகித் சர்மா சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனையடுத்து அவர் மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளது.

இது குறித்து தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்க்கு பேட்டியளித்துள்ள ஸ்ரீகாந்த் "ரோகித் சர்மா ஒரு கிளாஸான வீரர். அவர் டெஸ்ட் போட்டிக்காக தன்னுடைய இயல்பிலேயே இருக்கும் பேட்டிங் ஸ்டைலை மாற்றக்கூடாது. அவர் அனுபவமிக்க வீரர். தன்னுடைய வேலையை எப்படி செய்ய வேண்டும் என அவருக்குத் தெரியும். ஒரு முறை அவர் ஆடுகளத்தில் நின்றுவிட்டால்போதும், பின்பு ரன்கள் தானாக வரும். பின்பு ரோகித் விளையாடுவதை பார்ப்பதற்கே அற்புதமாக இருக்கும்" என்றார்.

மேலும் "அதன் பின்பு எதிரணிக்கு சிம்மசொப்பனமாக இருப்பார். ரோகித் ரன்களை குவிக்க தொடங்கிவிட்டால் கேப்டனால் அவருக்கு பீல்டிங் அமைப்பது அவ்வளவு எளிதானதாக இருக்காது. இங்கிலாந்துக்கு எதிராக அவர் உடலுடன் ஒட்டி வரும் பந்துகளையே அடித்து விளையாட வேண்டும். அவர் ஸ்டம்புக்கு வெளியேபோகும் பந்தை அடிக்க முனையும்போதுதான் அவுட்டாகிறார். அதனை அவர் கவனத்தில் கொள்ள வேண்டும். அநேகமாக இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ரோகித் சிறப்பாக விளையாடுவார் என நம்புகிறேன்" என்றார் ஸ்ரீகாந்த்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com