வெஸ்ட் இண்டீஸ் தொடர்.. சிக்சர் சாதனையை படைக்க காத்திருக்கும் ரோகித்

வெஸ்ட் இண்டீஸ் தொடர்.. சிக்சர் சாதனையை படைக்க காத்திருக்கும் ரோகித்
வெஸ்ட் இண்டீஸ் தொடர்.. சிக்சர் சாதனையை படைக்க காத்திருக்கும் ரோகித்
Published on

ஒரு சிக்சர் அடிக்கும் பட்சத்தில் இந்திய வீரர் ரோகித் சர்மா புதிய சாதனை பட்டியலில் இணைய உள்ளார். 

இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையேயான டி20 தொடர் வரும் 6-ஆம் தேதி தொடங்க உள்ளது. இந்தத் தொடரின் முதல் போட்டியில் இந்திய வீரர் ரோகித் சர்மா ஒரு சிக்சர் அடிக்கும் பட்சத்தில் சாதனை பட்டியலில் இணைய உள்ளார். இவர் ஒருநள், டெஸ்ட் மற்றும் டி20 ஆகிய சர்வதேச போட்டிகளில் 399 சிக்சர்கள் அடித்துள்ளார். 

ஆகவே வரும் போட்டியில் ரோகித் சர்மா ஒரு சிக்சர் அடிக்கும் பட்சத்தில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 400 சிக்சர்கள் அடித்த மூன்றாவது வீரர் என்ற பெருமையை பெறுவார். இதற்கு முன்பு வெஸ்ட் இண்டீஸ் அணியின் கிறிஸ் கெயில் (534 சிக்சர்கள்) மற்றும் பாகிஸ்தான் அணியின் அஃப்ரிதி (476 சிக்சர்கள்) ஆகியோர் 400 சிக்சர்களுக்கு மேல் அடித்துள்ளனர். இந்திய வீரர் ரோகித் சர்மா இந்தப் பட்டியலில் இணைய உள்ளார். 

அத்துடன் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 400 சிக்சர்கள் அடிக்கும் முதல் இந்திய வீரர் என்ற சாதனையையும் ரோகித் சர்மா படைக்க உள்ளார். இதுவரை ரோகித் சர்மா ஒருநாள் போட்டிகளில் 232 சிக்சர்களும், டெஸ்ட் போட்டிகளில் 52 சிக்சர்களும், டி20 போட்டிகளில் 115 சிக்சர்களும் விளாசியுள்ளார். ஏற்கெனவே இந்த ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சிக்சர்கள் அடித்த வீரர் என்ற பெருமையையும் ரோகித் சர்மா தனவசம் வைத்துள்ளார். இந்த ஆண்டு ரோகித் சர்மா இதுவரை 67 சிக்சர்கள் அடித்துள்ளார். 

கடந்த 2017 மற்றும் 2018ஆம் ஆண்டில் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சிக்சர் அடித்த வீரர் என்ற சாதனையை ரோகித் சர்மா படைத்திருந்தார். 2017ஆம் ஆண்டு 65 சிக்சர்களும், 2018ஆம் ஆண்டு 74 சிக்சர்களும் ரோகித் சர்மா விளாசி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com