கேப்டன்ஷிப் விவகாரம்|பேசாமல் இருந்த ரோகித் - ஹர்திக்.. இணைத்து வைத்த டிராவிட்.. சாத்தியமானது எப்படி?

டி20 உலகக் கோப்பை தொடருக்கான பயிற்சி தொடங்கிய முதல் நாளில் ரோகித் சர்மாவும் ஹர்திக் பாண்டியாவும் பேசிக்கொள்ளவில்லை என அந்த தொடரை நேரில் சென்று பார்த்த மூத்த பத்திரிகையாளர் விமல் குமார் என்பவர் கருத்து தெரிவித்துள்ளார்.
ரோகித், ஹர்திக், டிராவிட்
ரோகித், ஹர்திக், டிராவிட்எக்ஸ் தளம்
Published on

கடந்த ஐபிஎல் தொடரின்போது, மும்பை அணிக்கு ஹர்திக் பாண்டியா கேப்டனாக நியமிக்கப்பட்டார். இதையடுத்து ரோகித் சர்மா ரசிகர்கள், ஹர்திக் பாண்டியாவை தொடர் முடியும்வரை சீண்டினர். இது, பெரிய விவாதப் பொருளாக மாறியது. அத்துடன், அந்த தொடரில் மும்பை பெரிய அளவில் சோபிக்க முடியாமல் கடைசி இடத்தைப் பிடித்து பிளே வெளியேறியது.

கேப்டன்ஷிப் தொடர்பாக, ரோகித் சர்மாவுக்கும் ஹர்திக் பாண்டியாவுக்கும் இடையே மோதல் இருந்ததாகவும் செய்திகள் வெளியாகின. இதற்கிடையே டி20 உலகக்கோப்பைக்கு ரோகித் சர்மா கேப்டனாக அறிவிக்கப்பட்டார். அந்த தொடரில் ஹர்திக் பாண்டியாவும் இணைந்து விளையாடியதுடன், இந்திய அணி கோப்பையைக் கைப்பற்றவும் அவர்தான் காரணமாக இருந்தார்.

ஹர்திக் பாண்டியா, ரோகித் சர்மா
ஹர்திக் பாண்டியா, ரோகித் சர்மாட்விட்டர்

இந்த நிலையில், டி20 உலகக் கோப்பை தொடருக்கான பயிற்சி தொடங்கிய முதல் நாளில் ரோகித் சர்மாவும் ஹர்திக் பாண்டியாவும் பேசிக்கொள்ளவில்லை என அந்த தொடரை நேரில் சென்று பார்த்த மூத்த பத்திரிகையாளர் விமல் குமார் என்பவர் கருத்து தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: ஆந்திரா| ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் மாநிலங்களவை எம்பிக்கள் 2 பேர் ராஜினாமா.. ஜெகனுக்கு மேலும் பின்னடைவு!

ரோகித், ஹர்திக், டிராவிட்
”எனது கிரிக்கெட் மனைவி..” - ராகுல் டிராவிட் குறித்து உருக்கமான பதிவிட்ட ரோகித் சர்மா!

இதுகுறித்து அவர், ”டி20 உலகக் கோப்பை தொடரை கவர் செய்வதற்காக, நான் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளுக்குச் சென்றேன். இந்திய அணி பயிற்சி செய்து கொண்டிருந்தபோது ரோகித் சர்மாவும் ஹர்திக் பாண்டியாவும் என்ன செய்கிறார்கள் என்பதிலே எனது கவனம் இருந்தது. முதல் நாள் இருவரும் பேசிக்கொள்ளவே இல்லை. ரோகித் ஒரு இடத்தில் இருந்தால், ஹர்திக் பாண்டியா வேறொரு இடத்தில் இருப்பார். ஆனால் இரண்டாவது நாள் பயிற்சியின்போது நிலைமை கொஞ்சம் மாறியது. ரோகித்தும் ஹர்திக் பாண்டியாவும் பயிற்சியின்போது பேசிக் கொண்டனர்.

ஹர்திக் - ரோகித்
ஹர்திக் - ரோகித்Twitter

மேலும், சில மணி நேரத்துக்குப் பிறகு இருவரும் ஓர் இடத்தில் அமர்ந்து நீண்டநேரம் பேசினார்கள். அதன்பிறகு ஹர்திக் பாண்டியா பேட்டிங் செய்துகொண்டு இருந்தபோது ரோகித் சர்மா சில மாற்றத்தைக் கூறினார். முதல் நாளில் இருவரும் பேசவே இல்லை. ஆனால் அடுத்தடுத்த நாட்களில் இருவரும் நல்ல நண்பர்கள்போல் நடந்து கொண்டனர். இதை பார்க்கும்போது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. இந்த மாற்றத்திற்கு முக்கிய காரணம் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தான். அவர்தான் வீரர்கள் இடையே ஒற்றுமையை ஏற்படுத்தி இருந்தார். இரண்டு வீரர்களையும் எப்படி கையாள்வது என்று டிராவிட்டுக்கு நன்றாகவே தெரியும்” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: கொல்கத்தா | கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவரின் பெற்றோர் பேசியதாக வைரல் ஆகும் ஆடியோ - உண்மை என்ன?

ரோகித், ஹர்திக், டிராவிட்
லக்னோ அணியில் ரோகித் சர்மா? ரூ.50 கோடி கொடுத்து வாங்குவதா? முற்றுப்புள்ளி வைத்த உரிமையாளர்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com