பாகிஸ்தானுக்கு எதிராக ரோகித்-ராகுல் ஜோடி சாதனை

பாகிஸ்தானுக்கு எதிராக ரோகித்-ராகுல் ஜோடி சாதனை
பாகிஸ்தானுக்கு எதிராக ரோகித்-ராகுல் ஜோடி சாதனை
Published on

உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தானுக்கு எதிராக ரோகித் சர்மா - கே.எல்.ராகுல் ஜோடி சாதனை படைத்துள்ளது. 

இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போட்டி மான்செஸ்டரில் நடைபெற்று வருகிறது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் ரோகித் சர்மா, கே.எல்.ராகுல் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். காயம் காரணமாக ஷிகர் தவான் விளையாடாததால் அவருக்கு பதிலாக கே.எல்.ராகுல் தொடக்க வீரராக இறங்கினார். ரோகித் அதிரடியாக விளையாட ராகுல் அவருக்கு ஒத்துழைப்பு அளித்து நிதானமாக விளையாடினார். 

ரோகித் சர்மா அதிரடியாக விளையாடி 34 பந்துகளில் அரைசதம் அடித்தார். தொடர்ந்து நிதானமாக விளையாடிய ராகுல், சிக்ஸர் அடித்து 69 பந்துகளில் அரைசதம் அடித்தார். சிறப்பாக விளையாடி ராகுல் 2 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 78 பந்துகளில் 57 ரன்கள் அடித்து வாஹப் ரியாஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

முதல் விக்கெட்டுக்கு ரோகித் - ராகுல் ஜோடி 136 ரன்கள் எடுத்தது. உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக இந்தியா சார்பில் அடிக்கப்பட்ட அதிகபட்ச முதல் விக்கெட் பார்ட்னர்ஷிப் இதுதான். இதற்கு முன்பாக 1996இல் சச்சின் டெண்டுல்கர் - நவ்ஜோத் சிங் சித்து ஜோடி 90 ரன்கள் அடித்ததே அதிகபட்சம் ஆகும்.

உலகக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு இந்தியாவின் முதல் விக்கெட் பார்ட்னர்ஷிப்:

1992 - 25

1996 - 90

1999 - 37

2003 - 53

2011 - 48

2015 - 34  

2019 - 136

உலகக் கோப்பை தொடர்களில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அணி விளையாடியுள்ள 6 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com