“அடுத்த 3-4 நாட்களுக்குள் ரோகித்தும், இஷாந்தும் ஆஸ்திரேலியா வந்தாக வேண்டும்” -ரவி சாஸ்திரி

“அடுத்த 3-4 நாட்களுக்குள் ரோகித்தும், இஷாந்தும் ஆஸ்திரேலியா வந்தாக வேண்டும்” -ரவி சாஸ்திரி
“அடுத்த 3-4 நாட்களுக்குள் ரோகித்தும், இஷாந்தும் ஆஸ்திரேலியா வந்தாக வேண்டும்” -ரவி சாஸ்திரி
Published on

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. 

கோலி தலைமையிலான இந்திய அணி அதற்காக ஆஸ்திரேலியாவில் முகாமிட்டுள்ள நிலையில் காயத்திலிருந்து குணமடைந்து வரும் ரோகித்தும், இஷாந்தும் விரைவில் ஆஸ்திரேலியாவுக்கு வர வேண்டும் என தெரிவித்துள்ளார் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி. 

“தற்போது ரோகித்தும், இஷாந்தும் தேசிய கிரிக்கெட் அகாடமியில் தங்களது உடற்திறனை நிரூபிக்க பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும் அவர்கள் இருவரும் அடுத்த 3 முதல் 4 நாட்களுக்குள் ஆஸ்திரேலிய ஃபிளைட் பிடித்தாக வேண்டும். அப்படி இல்லை என்றால் டெஸ்ட் தொடரில் விளையாடுவது கொஞ்சம் சவாலாக அமையலாம். 

நவம்பர் 26க்குள் இருவரும் ஆஸ்திரேலியா வந்தால் தான் 14 நாட்கள் அவர்களை தனிமைப்படுத்த முடியும். அதன் பின்னர் அவர்கள் இருவரும் பயிற்சி ஆட்டத்தில் விளையாடுவதோடு டிசம்பர் 17 அன்று ஆரம்பமாக உள்ள முதல் டெஸ்ட் போட்டியில் விளையாட முடியும். அப்படி செய்யாமல் போனால் டெஸ்ட் போட்டிகளில் அவர்கள் விளையாடுவது கடினம் தான்” என ஆஸ்திரேலியாவில் உள்ள இந்திய அணியில் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com