"இப்போதைக்கு விராட் கோலிதான் எங்களது கேப்டன்" ரஹானே !

"இப்போதைக்கு விராட் கோலிதான் எங்களது கேப்டன்" ரஹானே !
"இப்போதைக்கு விராட் கோலிதான் எங்களது கேப்டன்" ரஹானே !
Published on

இப்போது இந்திய டெஸ்ட் அணிக்கு விராட் கோலிதான் கேப்டன் அதுதான் அனைவரின் எண்ணமும் என்று துணைக் கேப்டன் ரஹானே கூறியுள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி ஒருநாள் தொடரை இழந்தது. அதேசமயம் டி20 தொடரை வென்றது. இவ்விரு அணிகளுக்கு இடையே 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் டிசம்பர் 17 ஆம் தேதி அடிலெய்டில் தொடங்குகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் மட்டும் பங்கேற்கும் விராட் கோலி, அதற்கடுத்த 3 போட்டிகளில் பங்கேற்கமாட்டார். அனுஷ்கா சர்மாவிற்கு குழந்தை பிறக்க இருப்பதால் அவர் இந்தியா திரும்புகிறார்.

பிறகு மீதமிருக்கும் போட்டிகளுக்கு ரஹானே கேப்டனாக பொறுப்பு வகிப்பார். இது குறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய ரஹானே "நாளையை பற்றி நான் எப்போதும் யோசித்ததில்லை. இப்போது எங்களை பொறுத்தவரை கோலிதான் கேப்டன். நாங்கள் இப்போது தொடங்க இருக்கும் டெஸ்ட் போட்டியை மட்டும்தான் யோசித்து வருகிறோம். இந்தப் போட்டி முடிந்த பின்பு, கோலி இந்தியாவுக்கு திரும்பிய பின்புதான் அடுத்த டெஸ்ட் போட்டி குறித்து திட்டமிடுவோம்" என்றார்.

மேலும் பேசிய அவர் "பகலிரவு டெஸ்ட் போட்டி சவாலானது.பகல் நேரங்களில் பந்து ஒருவிதமாகவும், லைட்ஸ் போட்ட பின்பு பிங்க் நிறப் பந்து வேறு மாதிரியாகவும் செயல்படும். அதனால் பேட்ஸ்மேன்கள் மிகுந்த கவனத்துடன் விளையாட வேண்டும். அதேபோல பேட்ஸ்மேன்கள் ஒருவொருக்கு ஒருவர் நன்றாக பேசிக்கொள்ள வேண்டும். அது பிங்க் நிறப் பந்தை எதிர்கொள்ள உதவும். முதல் டெஸ்ட் போட்டிக்கு முன்பாக நடைபெற்ற பயிற்சி ஆட்டம் பகலிரவு போட்டியை எதிர்கொள்ள உதவியது" என்றார் ரஹானே.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com