ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களுக்கும் பயிற்சியாளர் ஜஸ்டின் லேங்கருக்கும் கருத்து வேறுபாடா?

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களுக்கும் பயிற்சியாளர் ஜஸ்டின் லேங்கருக்கும் கருத்து வேறுபாடா?
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களுக்கும் பயிற்சியாளர் ஜஸ்டின் லேங்கருக்கும் கருத்து வேறுபாடா?
Published on

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களுக்கும் அந்த அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஜஸ்டின் லேங்கருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டிருப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட இந்திய கிரிக்கெட் அணி 2-1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை வென்றது. நாடு திரும்பிய இந்திய வீரர்களுக்கு பலரும் பாராட்டு தெரிவித்தனர். ஆனால் தோல்வியடைந்த ஆஸ்திரேலிய அணி வீரர்கள் மீது அங்கு கடும் விமர்சனம் வைக்கப்பட்டது. இப்போதும் ஆஸ்திரேலிய வீரர்களின் ஆட்டம் கேள்விக்குறியானது. இந்நிலையில் வீரர்களுக்கும் ஜஸ்டின் லேங்கருக்கும் இடையே லேசான உரசல்களும் கருத்து வேறுபாடும் ஏற்பட்டு இருக்கிறது.

இது குறித்து செய்தி வெளியிட்டுள்ள 'சிட்னி மார்னிங் ஹெரால்டு' பத்திரிக்கை "ஜஸ்டின் லேங்கரின் அணுகுமுறை அணியில் இருக்கும் சீனியர் வீரர்களிடையே கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. பல மாதங்களாக கொரோனா பாதுகாப்பு வளையத்தில் இருந்து விளையாடுவதால் வீரர்களின் மன நிலையில் மாற்றம் ஏற்பட்டு இருக்கிறது. இதனால் மூத்த வீரர்கள் மனச்சோர்வு அடைந்திருக்கிறார்கள்".

மேலும் "பயிற்சியாளர் ஜஸ்டின் லேங்கர் திடீரென யோசனைகளை மாற்றுவதால் பலருக்கு எரிச்சல் ஏற்பட்டிருக்கிறது. முக்கியமாக காபா டெஸ்ட் போட்டியில் இடைவேளைகளில் பவுலிங் குறித்து யோசனைகளை அடிக்கடி மாற்றியதில், பலருக்கும் உடன்பாடு ஏற்படவில்லை. இதனால்தான் ஆஸ்திரேலிய தோல்வியடைந்ததாக, மூத்த வீரர்கள் நினைக்கிறார்கள்" என செய்தி வெளியாகி இருக்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com