சீம் & ஸ்விங் பவுலிங்கால் மிரட்டும் ரேணுகா சிங்! ஐசிசி-ன் வளர்ந்து வரும் வீரராக தேர்வு!

சீம் & ஸ்விங் பவுலிங்கால் மிரட்டும் ரேணுகா சிங்! ஐசிசி-ன் வளர்ந்து வரும் வீரராக தேர்வு!
சீம் & ஸ்விங் பவுலிங்கால் மிரட்டும் ரேணுகா சிங்! ஐசிசி-ன் வளர்ந்து வரும் வீரராக தேர்வு!
Published on

கடந்த 2022ஆம் ஆண்டின் வளர்ந்து வரும் வீராங்கனை என்ற ஐசிசியின் விருதை தட்டிச்சென்றுள்ளார், இந்தியாவின் சீம் மற்றும் ஸ்விங் புயலான ரேணுகா சிங்.

இந்தியாவின் புதிய இளம் வேகப்பந்து வீச்சாளரான ரேணுகா சிங், ஐசிசியின் 2022ஆம் ஆண்டுக்கான வளர்ந்து வரும் வீரர்களுக்கான போட்டி பட்டியலில் இருந்த ஆஸ்திரேலியாவின் டார்சி பிரவுன், இங்கிலாந்தின் ஆலிஸ் கேப்ஸி மற்றும் இந்தியாவின் யாஸ்திகா பாட்டியா ஆகியோரை வீழ்த்தி, கடந்த ஐசிசியின் 2022ஆம் ஆண்டின் வளர்ந்து வரும் கிரிக்கெட் வீரராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

ஜுலான் கோஸ்வானிக்கு பிறகு சீம் மற்றும் ஸ்விங்கில் கலக்கும் ரேணுகா சிங்!

இந்தியாவின் பவுலிங் ஜாம்பவான் வீராங்கனையான ஜுலான் கோஸ்வாமி, இந்திய அணிக்காக போட்டிகளை ஒரு கையால் வெற்றிப்பெற்று கொடுக்கும் வீரராக இருந்து வந்தார். ஒருநாள் போட்டிகளில் 255 விக்கெட்டுகளை வாரி குவித்த அவருக்கு பிறகு, அந்த இடத்தை நிரப்பும் வீரராக உருவெடுத்துள்ளார் ரேணுகா சிங்.

சீம் மற்றும் ஸ்விங்கில் அப்படியே கோஸ்வாமியை ரீகிரியேட் செய்தது போல அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார் ரேணுகா சிங். டி20 போட்டிகளில் 25 போட்டிகளில் விளையாடி இருக்கும் அவர் 23 விக்கெட்டுகளைத்தான் கைப்பற்றி இருந்தாலும், ஒருநாள் கிரிக்கெட்டில் வெறும் 7 போட்டிகளிலேயே 18 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார்.

பலம் வாய்ந்த ஆஸ்திரேலியாவிற்கு எதிராக 6 ரன்களில் 4 விக்கெட்டுகள்!

காமன்வெல்த் தொடரில் நடைபெற்ற முதல் கிரிக்கெட் போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதின. இதில் பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய டாப் ஆர்டர்கள் 4 வீரர்களையும் அடுத்தடுத்த 13 பந்துகளில் வெளியேற்றி அதிர்ச்சி கொடுத்திருந்தார் ரேணுகா சிங்.

ஆஸ்திரேலியாவின் ஓபனர் ஆலிசா ஹீலியை ஸ்லிப்பில் வெளியேற்றிய ரேணுகா, ஆஸ்திரேலியா கேப்டனை பாய்ண்டில் வெளியேற்றினார். பின்னர் அடுத்த இரண்டு விக்கெட்டுகளில் ஒரு மேஜிக்கை நிகழ்த்திக் காட்டினார் ரேணுகா, அடுத்தடுத்து வந்த இரண்டு பேட்டர்களையும் ஸ்டம்புகளை தட்டிதூக்கி வெளியேற்றினார். அதில் கிரிக்கெட் உலகின் நம்பர் 1 வீராங்கனையான டகிலா மெக்ராத்தை அற்புதமான இன்-ஸ்விங் டெலிவரியில் போல்டாக்கி வெளியேற்றியது, கிரிக்கெட் வட்டாரங்களில் பேசுபொருளாக மாறியது. வெறும் 13 பந்துகளில் 6 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்த பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணியின் டாப் ஆர்டர்கள் 4 பேரையும் வெளியேற்றிய ஒரே பவுலர் ரேணுகா சிங் மட்டும்தான்.

ஐசிசியின் 2022ஆம் ஆண்டின் வளர்ந்து வரும் வீரர்!

ஐசிசி-ன் 2022ஆம் வருடத்தின் சிறந்த வளர்ந்துவரும் வீரர்களுக்கான போட்டியில், அனைத்து வீரர்களையும் பின்னுக்குத் தள்ளி, இறுதிப்போட்டிக்கான நான்கு வீரர்களின் பெயர்களில் ஆஸ்திரேலியாவின் டார்சி பிரவுன், இங்கிலாந்தின் ஆலிஸ் கேப்ஸி மற்றும் இந்தியாவின் யாஸ்திகா பாட்டியா பெயர்களுக்கிடையே தன்னுடைய பெயரையும் பதிந்திருந்தார் ரேணுகா சிங். இந்நிலையில் இறுதியாக அனைவரையும் வீழ்த்தி ரேணுகா சிங், 2022ஆம் ஆண்டின் வளர்ந்துவரும் வீரர் என்ற விருதை பெற்று அசத்தியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com