பிஎஸ்ஜி கால்பந்து அணி தனது லீக் 1 சீசனின் முதல் தோல்வியை பதிவு செய்துள்ளது.
தொடர்ச்சியாக எட்டு வெற்றிகளை பெற்றுள்ள பிஎஸ்ஜி அணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற போட்டியில் 2: 0 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது. இதன் மூலம் தொடர்ச்சியாக பெற்ற வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்தது ரெனெஸ்.
லியோனல் மெஸ்ஸி முதல் பாதியில் தனக்கு கிடைத்த ஃப்ரீ - கிக்கை அடித்தார். ஆனால், பந்து க்ராஸ் பாரில் பட்டு வெளியே சென்றுவிட்டது. இந்த போட்டியின் முதல் பாதியில் 45 வது நிமிடத்தில் லெபோர்ட் தனது முதல் கோலை பதிவு செய்தார். ஆட்டத்தின் முதல் பாதியில் பிஎஸ்ஜி அணி ஒருகோல் வாங்கிய நிலையில் பின்தங்கியிருந்தது. இதையடுத்து ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் 46வது நிமிடத்தில் ப்ளேவின் டெய்ட் ஒரு கோல் அடித்தார். அதன் மூலம் ரெனெஸ் இரண்டு கோல்கள் அடித்து வெற்றி பெற்றது.
முழங்கால் காயத்துடன் இரண்டு லீக் 1 ஆட்டங்களில் பங்கேற்காத நிலையில், பிஎஸ்ஜி அணிக்கான இரண்டாவது லீக் போட்டியில் நெய்மர், எம்பாப் மற்றும் ஏஞ்சல் டி மரியாவுடன் மெஸ்ஸி களமிறங்கினார். 2018 ஆம் ஆண்டு தாமஸ் துச்சலின் கீழ் 14 போட்டிகளில் வெற்றி பெற்ற அணியுடனான சாதனையை தக்க வைத்துக் கொள்ள, பிஎஸ்ஜி அணி முதல் பாதியில் தொடர்ச்சியான வாய்ப்புகளை உருவாக்கியது. ஆனால், இவை அனைத்தும் வீணாகிவிட்டன.