சென்னைக்கு எதிரான விறுவிறுப்பான போட்டியில் பெங்களூரு 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி

சென்னைக்கு எதிரான விறுவிறுப்பான போட்டியில் பெங்களூரு 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி
சென்னைக்கு எதிரான விறுவிறுப்பான போட்டியில் பெங்களூரு 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி
Published on

ஐபிஎல் தொடரில் சென்னைக்கு எதிரான போட்டியில், பெங்களூரு அணி ஒரு ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.

ஐபிஎல் தொடரின் 39வது லீக் போட்டியில் நேற்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. முதலில் பேட்டிங்கை தொடங்கிய பெங்களூர் அணியில் கேப்டன் விராட் கோலி 9 (8) ரன்கள் மட்டுமே எடுத்து வெளியேறினார். அதேசமயம் மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான பார்திவ் படேல் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

படேலும், டி வில்லியர்ஸும் ஜோடி சேர்ந்து அணியின் ஸ்கோரை உயர்த்தும்போது, 25 (19) ரன்களில் வில்லியர்ஸ் விக்கெட்டை வீழ்த்தினார் ஜடேஜா. அதைத்தொடர்ந்து வந்த அக்‌ஷ்தீப் நாத் 24 (20) ரன்கள் எடுத்து, அவரும் ஜடேஜாவிடம் விக்கெட்டை பறிகொடுத்தார். நிலைத்து விளையாடிய பார்திவ் அரை சதம் அடித்து, 53 (37) ரன்களில் ஆட்டமிழந்தார். 20 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 161 ரன்கள் குவித்தது.

162 ரன்கள் இலக்குடன் பேட் செய்த சென்னை அணிக்கு வாட்சன், டூ பிளஸி, ரெய்னா, கேதர் ஜாதவ் ஆகியோர் ஒற்றை இலக்கில் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தனர். சிறிது நேரம் களத்தில் நின்ற ராயுடு 29 ரன்களில் ஆவுட் ஆனார். அணியின் கேப்டன் தோனி பொறுப்புணர்ந்து விளையாடினார். சென்னை அணி வெற்றி பெற கடைசி ஓவரில் 26 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், கேப்டன் தோனி முதல் 5 பந்துகளில் மூன்று சிக்ஸர், ஒரு ஃபோர் உள்பட 24 ரன்கள் எடுத்தார்.

கடைசி பந்தில் 2 ரன்கள் தேவைபட்ட நிலையில், உமேஷ் யாதவ் வீசிய பந்தை தோனி தவறவிட்டார். எனினும், ரன் எடுக்க முயற்சித்த போது, ஷர்துல் தாகூரை ரன் அவுட் ஆனார். இதன் மூலம், பெங்களூரு அணி 1 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. இறுதி வரை களத்தில் நின்று போராடிய தோனி 48 பந்துகளில், 7 சிக்சர்கள் உள்பட 84 ரன்கள் எடுத்தார். அரைசதம் விளாசிய பெங்களூரு வீரர் பார்த்தீவ் பட்டேல் ஆட்டநாயகன் விருது பெற்றார்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com