பங்களாதேஷூக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி இன்னிங்ஸ் வெற்றிபெற்றது.
தென்னாப்பிரிக்கா- பங்களாதேஷ் அணிகள் இடையிலான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி புளோம்ஃபோன்டீனில் நடந்துவந்தது. முதல் இன்னிங்கிஸில் 4 விக்கெட் இழப்புக்கு 573 ரன்கள் எடுத்து தென்னாப்பிரிக்க அணி, டிக்ளேர் செய்தது. அந்த அணியின் டீன் எல்கர், மார்க்ராம், ஹாஷிம் ஆம்லா, கேப்டன் டூ பிளஸ்ஸி ஆகிய நான்கு பேர் சதமடித்தனர்.
பங்களாதேஷ் அணி முதல் இன்னிங்ஸில் 147 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஃபாலோ ஆன் பெற்றது. அந்த அணியின் மகமுத்துல்லா மட்டும் அதிகபட்சமாக 43 ரன்கள் எடுத்தார். மற்றவர்கள் குறைந்த ரன்களையே எடுத்தனர். இதையடுத்து 172 ரன்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியை தழுவியது. தென்னாப்பிரிக்கா, இன்னிங்ஸ் மற்றும் 254 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது.
தென்னாப்பிரிக்க அணியின் வேகப்பந்துவீச்சாளர் ரபடா, இரண்டு இன்னிங்ஸிலும் சேர்த்து 10 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டநாயகன் விருது பெற்றார்.
இந்த வெற்றியின் மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை தென்னாப்பிரிக்கா வென்றுள்ளது.