இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து, துணை ஆட்சியராகப் பொறுப்பேற்றார்.
ரியோ ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றதைத் தொடர்ந்து, ஆந்திர அரசு சிந்துவுக்கு கடந்த மாதம் 27-ம் தேதி துணை ஆட்சியர் பதவிக்கான, பணி நியமன ஆணையை வழங்கியது. பணிநியமன ஆணையை பெற்றுக்கொண்ட சிந்து, தனது பெற்றோருடன் ஆந்திர தலைமை செயலகத்தில் உள்ள நில நிர்வாக அலுவலகத்துக்குச் சென்று நேற்று பொறுப்பை ஏற்றுகொண்டார். இது பெரிய கௌரவம் என சிந்து தெரிவித்துள்ளார்.
பி.சி.சிந்துவை ஊக்கப்படுத்தும் வகையில், ஆந்திர அரசு ஏற்கனவே 3 கோடி ரூபாய் மற்றும் வீட்டுமனையை பரிசாக வழங்கியது குறிப்பிடத்தக்கது.