உலக பேட்மிண்டன் தொடர்: இந்திய வீராங்கனை பி.வி.சிந்து சாம்பியன்

உலக பேட்மிண்டன் தொடர்: இந்திய வீராங்கனை பி.வி.சிந்து சாம்பியன்
உலக பேட்மிண்டன் தொடர்: இந்திய வீராங்கனை பி.வி.சிந்து சாம்பியன்
Published on

உலக பேட்மிண்டன் தொடரில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்தார். 

பேட்மிண்டன் தரவரிசையில் முதல் எட்டு இடங்களுக்குள் உள்ள வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் உலக பேட்மிண்ட்ன் இறுதிச் சுற்று (World Tour Finals) தொடர் சீனாவில் உள்ள குவாங்ஸோ நகரில் நடந்து வந்தது. 

இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் அரை இறுதியில், தரவரிசையில் 6-வது இடத்தில் உள்ள இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, 8-ம் நிலை வீராங்கனையான தாய்லாந்தின் ராட்சனோக் இன்டானோனுடம் மோதினார்.

இதில் பி.வி.சிந்து 21-16, 25-23 என்ற நேர்செட்டில் இன்டானோனை தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இந்த போட்டியில் சிந்து தொடர்ந்து 2-வது ஆண்டாக இறுதிப்போட்டியை எட்டினார்.

இதன் இறுதிப் போட்டி இன்று நடந்தது. இதில், ஜப்பான் வீராங்கனை நஜோமி ஒகுஹராவை எதிர்கொண்டார். முன்னாள் உலக சாம்பியனான இவரும் சிந்துவும் இதுவரை 12 முறை  மோதி உள்ளனர். இதில் இருவரும் தலா 6-ல் வெற்றி கண்டிருந்ததால், இன்றைய போட்டி பரபரப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

அதன்படி நடந்த போட்டியில், ஜப்பானின் ஓகுஹராவை 21-19, 21-17 என்ற செட் கணக்கில் வென்று சாம்பியன் படத்தை வென்றார் பி.வி.சிந்து.

இந்த தொடரில் பி.வி.சிந்து சாம்பியன் பட்டம் பெறுவது இதுவே முதன்முறையாகும். இந்த பட்டத்தை வெல்லும் முதல் இந்தியரும் சிந்துதான் என்பது குறிப்பிடத்தக்கது.இதற்கு முன்பு ஒலிம்பிக், காமன்வெல்த், ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வெள்ளி பதக்கம் வென்றிருக்கிறார் சிந்து.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com