"கோலியை விட புஜாராதான் கெத்து" நாதன் லயன் !

"கோலியை விட புஜாராதான் கெத்து" நாதன் லயன் !
"கோலியை விட புஜாராதான் கெத்து" நாதன் லயன் !
Published on

விராட் கோலி, ரஹானேவை விட புஜாராவை அவுட் செய்வதுதான் கடினமான காரியம் என்று ஆஸ்திரேலிய அணியின் சுழற்பந்துவீச்சாளர் நாதன் லயன் தெரிவித்துள்ளார்.

உலகெங்கிலும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கிரிக்கெட் போட்டிகள் பலவும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்தியாவில் ஐபிஎல் போட்டிகளும் காலவரையின்றி தள்ளி வைக்கப்பட்டுள்ளது. மேலும், ஆஸ்திரேலியாவில் அக்டோபர் மாதம் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பை தொடரும் தள்ளிப்போக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் திட்டமிட்டப்படி உலகக் கோப்பை தொடர் நடைபெறும் என்று ஐசிசி தெரிவித்துள்ளது.

இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் கிரிக்கெட் வீரர்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் ரசிகர்களிடையே உரையாற்றி வருகின்றனர். இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் "ஆஃப் ஸ்பின்னர்" லாதன் லயன், நாளிதழ் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார். அதில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் குறித்து விரிவாக பேசியுள்ளார். அதில் இந்திய வீரர்களில் புஜாராவை அவுட் செய்வதுதான் கடினமான விஷயம் என தெரிவித்துள்ளார்.

அந்தப் பேட்டியில் " இந்தியா மட்டுமல்ல டெஸ்ட் போட்டிகளில் கோலி, ரஹானேவைப் பற்றி சர்வதேசளவில் புகழ்ந்து பேசுவார்கள். ஆனால் புஜாரா, ஒரு சுவர். இந்திய அணியின் புதிய சுவர் எனச் சொல்லலாம். கடந்தமுறை ஆஸ்திரேலியா வந்தபோது மிகச்சிறப்பாக விளையாடினார். சூழலுக்கு ஏற்றாற்போல ஆட்டத்தை மாற்றிக்கொண்டார். அவருக்குச் சில அதிர்ஷ்டங்களும் இருந்தன. இந்தாண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள டெஸ்ட் தொடரில் இந்திய அணி பங்கேற்கிறது. அப்போது புஜாராவை வீழ்த்த புதிய திட்டங்களை வைத்துள்ளோம்" என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com