ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் பெண்களுக்கான 1500 மீட்டர் ஓட்டத்தில் இந்திய வீராங்கனை பி.யூ.சித்ரா தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தார்.
23-வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி தோகாவில் நடந்து வருகிறது. இதில் பெண்களுக்கான 1500 மீட்டர் ஓட்டம் நேற்று நடைபெற்றது. இதில் இந்திய வீராங்கனையான பி.யூ.சித்ரா முதலிடம் வந்து தங்கப்பதக்கத்தை வென்றார். இதில் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களை பக்ரனை சேர்ந்த வீராங்கனைகள் பிடித்தனர்.
4 நிமிடம் 14.46 வினாடிகளில் சித்ரா பந்தய இலக்கை கடந்தார். அதேசமயம் இரண்டாவது இடம் பிடித்த பக்ரைன் வீராங்கனையான கஷாவ் 4 நிமிடம் 14.81 விநாடிகளில் பந்ததைய இலக்கை கடந்தார். இதுகுறித்து சித்ரா கூறும்போது, கடைசி நேரத்தில் ஓட்டம் மிகவும் சவாலாக இருந்தது எனக் கூறியுள்ளார். சித்ரா கேரள மாநிலம் பாலக்கோட்டை சார்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்று நடந்த பெண்களுக்கான 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் 30 வயதான தமிழக வீராங்கனை கோமதி 2 நிமிடம் 02.70 வினாடியில் 800 மீட்டர் தூரத்தை கடந்து தங்கப்பதக்கத்தை வென்றிருந்தார்.