நியூசிலாந்து ஏ அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய ஏ அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது.
நியூசிலாந்துக்குச் சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய ஏ அணி, அதிகாரப்பூர்வமற்ற மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டி இன்று நடைபெற்றது. லின்கால்னில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய ஏ அணி, பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
இதில் அபாரமாக பந்து வீசிய இந்திய ஏ அணியால், நியூசிலாந்து வீரர்கள் 48.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 231 ரன்களுக்கு சுருண்டது. நியூசிலாந்து ஏ அணியின் ரவிந்திரா 49 ரன்களும் கேப்டன் புரூஸ் 47 ரன்களும் எடுத்தனர். இந்திய ஏ அணி தரப்பில் சிராஜ் 3 விக்கெட்டுகளும் கலீல் அஹமது, அக்ஸர் படேல் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
இதன்பிறகு களமிறங்கிய இந்திய ஏ அணியின் பேட்ஸ்மேன்கள் அதிரடியாக விளையாடினர். பேட்ஸ்மேன்கள் அதிரடியாக விளையாடியதால் 29.3 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 231 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது இந்திய ஏ அணி. பிரித்வி ஷா 35 பந்துகளில் 3 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 48 ரன்களும், சஞ்சு சாம்சன் 21 பந்துகளில் 2 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 39 ரன்களும் எடுத்து இந்திய அணி எளிதில் வெற்றி பெற உதவினார்கள். சூர்யகுமார் யாதவும் அதிரடியாக விளையாடி 19 பந்துகளில் 35 ரன்கள் எடுத்து அசத்தினர்.