பாராலிம்பிக்கில் பதக்க வேட்டையில் இறங்கிய இந்தியா! 27 பதக்கங்களுடன் அசத்தல்!

பாரிஸ் பாராலிம்பிக் தொடரில் இந்தியாவிற்கு மேலும் ஒரு தங்கம் கிடைத்துள்ளது. நேற்று ஒரேநாளில் தடகளப் பிரிவில் இந்திய வீரர்கள் இரண்டு பதக்கங்களை வென்றனர்.
பாராலிம்பிக்
பாராலிம்பிக்முகநூல்
Published on

பாரிஸ் பாராலிம்பிக் தொடரில் இந்தியாவிற்கு மேலும் ஒரு தங்கம் கிடைத்துள்ளது. நேற்று ஒரேநாளில் தடகளப் பிரிவில் இந்திய வீரர்கள் இரண்டு பதக்கங்களை வென்றனர்.

பாராலிம்பிக் ஆண்களுக்கான குண்டு எறிதல் போட்டியில் இந்திய வீரர் ஹோகாடோ சிமா 14.65 மீட்டர் தூரத்திற்கு வீசி மூன்றாவது இடம்பிடித்தார். இதன்மூலம் அவர் வெண்கலப் பதக்கம் வென்றார். இது அவரது தனிப்பட்ட அதிகபட்ச சாதனையாகும்.

இதேப் போட்டியில் பங்கேற்ற மற்றொரு இந்திய வீரர் ராணா 14.07 மீட்டர் தூரத்திற்கு வீசி 5-ஆவது இடம்பிடித்தார். முன்னதாக நடந்த ஆண்களுக்கான உயரம் தாண்டுதல் போட்டியில், இந்திய வீரர் பிரவீன் குமார், 2.08 மீட்டர் உயரம் தாண்டி தங்கப்பதக்கம் வென்றார்.

பாராலிம்பிக்
’The Real G.O.A.T' | 900 கோல்கள்.. கால்பந்து வரலாற்றில் இமாலய சாதனை.. உணர்ச்சிவசப்பட்ட ரொனால்டோ!

இதன்மூலம் பாராலிம்பிக் உயரம் தாண்டுதலில், தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலுவிற்கு பிறகு தங்கம் வென்ற இந்தியர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார். பாரிஸ் பாராலிம்பிக் தொடரில் 6 தங்கம், 9 வெள்ளி, 12 வெண்கலம் என மொத்தம் 27 பதக்கங்களுடன் பட்டியலில் 17-ஆவது இடத்தில் இந்தியா உள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com