இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் பிரவீன் குமார் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் பிரவீன் குமார். உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த இவர், 2007 ஆம் ஆண்டு பாகிஸ் தானுக்கு எதிரான தொடரின் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார். 68 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி, 77 விக்கெட்டு களை வீழ்த்தியுள்ளார். இவரது சராசரி 36.02. ஆறு டெஸ்ட் போட்டிகளில் 11 இன்னிங்ஸில் விளையாடி 27 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள இவர், பத்து டி20 போட்டிகளிலும் பங்கேற்றுள்ளார்.
இவர் கடைசியாக 2012 ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் பங்கேற்றிருந்தார். அதன் பிறகு உள்ளூர் போட்டிகளில் விளையாடி வந்த இவர், ஐபிஎல் தொடரில் பஞ்சாப், ஐதராபாத், குஜராத், பெங்களூரு அணிகளுக்காக விளையாடியுள்ளார். இவர் அனைத்துவித கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
Read Also -> ஐபிஎல் 2019: டி காக்கை மும்பைக்கு விற்றது பெங்களூரு!
இதுபற்றி பிரவீன் குமார் மேலும் கூறும்போது, ‘‘ஓய்வு பெறுவதற்கு இதுதான் சரியான தருணம். அனைத்துவிதமான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுகிறேன். கிரிக்கெட் எனக்கு நிறைய கொடுத்திருக்கிறது. இது பெருமையான பயணம். சிறப்பான வாழ்க்கை. என் முதல் காதலான இந்த கிரிக்கெட்டை கனத்த இதயத்துடன் விட்டுவிலகுகிறேன்.
Read Also -> “எனது அக்கவுண்ட்டை ஹேக் செஞ்சுட்டாங்க” - த்ரிஷா
உத்தரபிரதேசத்தில் இளம் வீரர்கள் அதிகமாக இருக்கிறார்கள். அவர்களுக்கு வழிவிட்டும் அவர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டும் ஓய்வு பெறுகிறேன்’ என்று தெரிவித்துள்ளார். பந்துவீச்சு பயிற்சியாளர் ஆக விருப்பம் இருப்பதாகவும் பிரவீன்குமார் தனது ஆசை யை வெளிப்படுத்தியுள்ளார்.