யூரோ கோப்பை: "கோல்டன் பூட்" விருதை வென்றார் கிறிஸ்டியானோ ரொனால்டோ

யூரோ கோப்பை: "கோல்டன் பூட்" விருதை வென்றார் கிறிஸ்டியானோ ரொனால்டோ
யூரோ கோப்பை: "கோல்டன் பூட்" விருதை வென்றார் கிறிஸ்டியானோ ரொனால்டோ
Published on

யூரோ 2020 கால்பந்து தொடரின் கோல்டன் பூட் என்ற தங்கக் காலணி விருதை போர்ச்சுகல் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ தட்டிச் சென்றார்.

யூரோ 2020 தொடரில் ஒவ்வொரு போட்டியிலும் ரொனால்டோ கோல் அடித்தார். ஹங்கேரி, பிரான்ஸுக்கு எதிராக தலா 2 கோல்களை அடித்தார். ஆனால் நாக் அவுட் சுற்றில் பெல்ஜியத்துக்கு எதிரான போட்டியில் 0-1 தோல்வியடைந்தது போர்ச்சுகல். அந்தப் போட்டியில் ரொனால்டோ கோல் அடிக்காமல் ஏமாற்றினார். ரொனால்டோ மொத்தம் 5 கோல்கள் அடித்து முன்னிலை வகித்ததால், அவருக்கு தங்கக் காலணி விருது வழங்கப்பட்டது. முதல் முறையாக யூரோ கோப்பையில் கோல்டன் பூட் விருதை பெறுகிறார் ரொனால்டோ.

செக் குடியரசு அணியின் ஃபார்வேர்ட் வீரர் பாட்ரிக் ஷிக் 5 கோல்கள் அடித்தபோதிலும், டைபிரேக்கர் முறையில் ரொனால்டோவுக்கு கோல்டன் பூட் விருது வழங்கப்பட்டது. மேலும் யூரோ கோப்பையில் போர்ச்சுகல் அணிக்காக 24 முறை களமிறங்கி அதிகமான போட்டியில் விளையாடிய வீரர் எனும் பெருமையை ரொனால்டோ பெற்றுள்ளார்.

முன்னதாக யூரோ கோப்பை கால்பந்தாட்ட இறுதிப் போட்டியில் பெனால்டி ஷூட் முறையில் இங்கிலாந்து அணியை 2-3 என்ற கோல்கணக்கில் வீழ்த்தி இத்தாலி அணி 2-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது. ஏறக்குறைய 52 ஆண்டுகளுக்குப்பின் யூரோ கோப்பையை இத்தாலி கைப்பற்றியது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com