ஷமிக்கு க்ரீன் சிக்னல் காட்டிய போலீஸ்

ஷமிக்கு க்ரீன் சிக்னல் காட்டிய போலீஸ்
ஷமிக்கு க்ரீன் சிக்னல் காட்டிய போலீஸ்
Published on

கிரிக்கெட் வீரர் முகமது ஷமி தொடர்ந்து ஐபிஎல் போட்டிகளில் விளையாட கொல்கத்தா காவல்துறை அனுமதி வழங்கி யுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி. கடந்த பிப்ரவரி மாதத்தில் இவரது சொந்த வாழ்க்கையில் மனைவி ஹசின் ஜகான் ரூபத்தில் புயல் வீசத் தொடங்கியது. ஷமிக்கு பல்வேறு பெண்களுடன் தொடர்பு இருப்பதாகவும் தன்னை அடித்து துன்புறுத்துவதாகவும் முகநூலில் பதிவிட்டார். இதனையடுத்து செய்தியாளர்கள் சந்திப்பில் எனக்கு உண்மையாக இல்லாத ஷமி நாட்டுக்கும் உண்மையாக இல்லை என அடுத்த குண்டை தூக்கிப் போட்டார். ஷமி சூதாட்டத்தில் ஈடுபட்டதாகவும் அதற்காக பாகிஸ்தான் பெண், ஷமிக்கு பணம் கொடுத்ததாகத் தெரிவித்தார்.

மனைவியின் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளில் நிலைகுலைந்துப்போன ஷமி, சில நாட்கள் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஷமி, மனைவியின் குற்றச்சாட்டுகளை மறுத்தார். என் நாட்டுக்கு துரோகம் செய்வதை விட இறந்து விடுவேன் எனக் கூறினார்.இந்நிலையில் ஷமியின் மனைவி அவர் மீது காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

மனைவி அளித்த புகாரின் பேரில், ஷமியிடம் நேற்று 3 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணைக்கு முகமது ஷமி , முழு ஒத்துழைப்பு அளித்ததாக கொல்கத்தா காவல்துறை தெரிவித்துள்ளது. தேவைப்பட்டால் மீண்டும் விசாரணைக்கு அழைப்போம் என்றும், அதுவரை அவர் ஐபிஎல் போட்டிகளில் விளையாட எவ்வித தடையும் இல்லை என காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து வேகப்பந்து வீச்சாளரான முகமது‌ ஷமி, மீண்டும் டெல்லி டேர்டெவில்ஸ்‌ அணியுடன் இணைகிறார். டெல்லி அணி தனது அடுத்த போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை நாளை மறுதினம் எதிர்கொள்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com