“ரிஷாப் பன்ட்டை விமர்சிப்பதை முதலில் நிறுத்துங்கள்”- ஆதரவாக பேசிய ரோகித்..!

“ரிஷாப் பன்ட்டை விமர்சிப்பதை முதலில் நிறுத்துங்கள்”- ஆதரவாக பேசிய ரோகித்..!
“ரிஷாப் பன்ட்டை விமர்சிப்பதை முதலில் நிறுத்துங்கள்”- ஆதரவாக பேசிய ரோகித்..!
Published on

ரிஷாப் பன்ட்டை விமர்சிப்பதை விடுங்கள் என்று இந்திய கிரிக்கெட் அணியின் தற்காலிக கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார். 

இந்திய கிரிக்கெட் அணி தற்போது பங்களாதேஷ் அணியுடன் டி20 தொடரில் பங்கேற்று வருகிறது. இந்தத் தொடரின் முதல் போட்டியில் பங்களாதேஷ் அணி வெற்றிப் பெற்றது. இரண்டாவது போட்டியில் சிறப்பாக விளையாடிய இந்திய அணி எளிதாக வெற்றிப் பெற்றது. இந்த இரண்டு போட்டிகளிலும் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷாப் பன்ட் சரியாக செயல்படவில்லை என்று ரசிகர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக இரண்டாவது போட்டியில் பந்தை ஸ்டெம்பிற்கு முன்பு பிடித்து சிறு பிள்ளைத்தனமாக தவறு செய்துவிட்டார் என்று விமர்சித்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்திய அணியின் தற்காலிக கேப்டன் ரோகித் சர்மா, ரிஷாப் பன்ட்டிற்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார். அதில், “தினமும் ரிஷாப் பன்ட் குறித்த கருத்துகள் வந்து கொண்டிருக்கின்றன. இதற்கு நான் கூற விரும்புவது ஒன்றுதான். ரிஷாப் பன்ட்டை விமர்சிக்காமல் தனியாக விடுங்கள். அவர் ஒரு நல்ல வீரர். அவரை நீங்கள் மிகவும் உன்னிப்பாக கவனித்து கருத்து கூறுவதை நிறுத்தி விட்டால் அவர் சிறப்பாக விளையாடுவார். 

அத்துடன் ரிஷாப் பன்ட் ஒரு இளம் வீரர். தற்போதுதான் இந்திய அணியில் தனக்கு என்று ஒரு தனி அடையாளத்தை பதிக்க காத்திருக்கிறார். இந்த சமயத்தில் அவர் ஆடுகளத்தில் செய்யும் ஒவ்வொரு செயலையும் விமர்சிப்பது மிகவும் தேவையற்ற ஒன்று. ஆகவே அவரை அவருடைய ஸ்டைலில் கிரிக்கெட் விளையாட விடுங்கள். அவர் தற்போது தான் சர்வதேச அளவில் நிறையே கற்றுக் கொண்டு வருகிறார். இந்தச் சூழலில் அவர் செய்யும் தவறுகளை பார்க்காமல், அவர் கீப்பிங்கில் செய்யும் நல்ல செயல்களை பாராட்டுங்கள். மேலும் அணி நிர்வாகம் அவரிடமிருந்து என்ன எதிர்பார்க்கிறதோ அதை அவர் செய்ய முயற்சி செய்து வருகிறார்” எனத் தெரிவித்துள்ளார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com