ஐபிஎல் 2020: முறியடிக்கப்படவுள்ள சாதனைகள்.. காத்திருக்கும் வீரர்கள்..!

ஐபிஎல் 2020: முறியடிக்கப்படவுள்ள சாதனைகள்.. காத்திருக்கும் வீரர்கள்..!
ஐபிஎல் 2020: முறியடிக்கப்படவுள்ள சாதனைகள்.. காத்திருக்கும் வீரர்கள்..!
Published on

ஐ.பி.எல் 2020, வரும் செப்டம்பர் 19ம் தேதி தொடங்க உள்ள நிலையில், எந்தெந்த ஐ.பி.எல் சாதனைகள் இந்த சீசனில் முறியடிக்கப்பட வாய்ப்புகள் இருக்கிறது, யார் முறியடிக்கலாம்?

1) ஐ.பி.எல் செஞ்சுரிஸ்

 யூனிவர்ஸ் பாஸ் என அழைக்கப்படும் கிறிஸ் கெயில்யில் தான் ஐ.பி.எல் தொடரிலும் பாஸ். இதுவரை நடைபெற்ற ஐ.பி.எல் தொடரில் 6 செஞ்சுரிகள் விளாசி, அதிக சதங்கள் விளாசிய வீரர்கள் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறார் கிறிஸ் கெயில். எனினும் அவருக்கு மிக அருகாமையில் 5 செஞ்சுரிகளுடன் சவால் விடுக்கிறார் கோலி. சமீபத்திய ஃபார்ம் வைத்து பார்க்கையில் ஐ.பி.எல் லில் அதிக செஞ்சுரிஸ் விளாசிய வீரர் என்ற கிறிஸ் கெயிலின் சாதனை ஐ.பி.எல் 2020ல் கோலியால் முறியடிக்கப்பட அதிக வாய்ப்புகள் உள்ளது

2) ஐ.பி.எல் சுழல்

ஐபிஎல் தொடரிலேயே அதிக விக்கெட் வீழ்த்திய வீரர் லசித் மலிங்கா (170), ஆனால் இந்த சீசன் மும்பை அணிக்கு மலிங்கா விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் விக்கெட் பட்டியலில் மாற்றங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. 157 விக்கெட்களுடன் அமித் மிஸ்ரா இரண்டாவது இடத்திலும், சென்னை அணி ஸ்பின்னரான ஹர்பஜன் & பியூஸ் சாவ்லா 150 விக்கெட்களுடன் 3வது இடத்தில் உள்ளனர். அரபு ஆடுகளங்கள் சுழல் பந்துவீச்சுக்கு கூடுதல் சாதமாக இருக்கும் என்ற கணிப்புகள், மலிங்காவின் "ஆல் டைம் ரெகார்ட்டை" இந்த சீசன் முறியடிக்கப்படும் என்கின்றனர்

3) டாப் ஐ.பி.எல் பேட்ஸ்மேன்

 சர்வதேச கிரிக்கெட்டை தனது பேட்டிங்கால் ஆட்டி படைக்கும் விராட் கோலி தான் ஐ.பி.எல் போட்டிகளிலும் அதிக ரன் அடித்துள்ள வீரர். 5412 ரன்களோடு முதல் இடத்தில் இருக்கும் கோலிக்கு, ஒரே போட்டியாளர் சுரேஷ் ரெய்னா. 5368 ரன்களுடன் இரண்டாவது இடத்தில் இருக்கும் ரெய்னா இந்த சீசன் விளையாடுவதற்கான வாய்ப்பு குறைவு என்ற நிலையில், அதிக ரன்களை குவித்த வீரராக கோலியே முதல் இடத்தில் தொடர்வதற்கான வாய்ப்புகள் அதிகம். ஆனால் ஐபிஎல் தொடரில் இதுவரை எந்த வீரரும் நிகழ்த்தாத 6000 ரன்கள் என்ற சாதனையை விராட் கோலி நிகழ்த்த வாய்ப்புகள் அதிகம்.


4) "D" கீப்பிங் யுத்தம் - DHONI VS DINESH

 ஐ.பி.எல் தொடரிலேயே அதிக விக்கெட் வீழ்த்த உறுதுணையாக இருந்த விக்கெட் கீப்பராக "தோனியே" இருக்கிறார். ஆனால் தோனிக்கு போட்டியாக மிக அருகாமையில் இருக்கிறார் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக். ஐ.பி.எல் போட்டியில் தோனி 133 வீரர்களை dismiss செய்துள்ளார், அதே நேரம் தினேஷ் கார்த்திக் 131 வீரர்களை சாய்த்துள்ளார். இருவருக்கும் இடையே வெறும் 2 விக்கெட்கள் மட்டுமே வித்தியாசம் இருப்பதால் தோனியின் சாதனையை தினேஷ் கார்த்திக் முறியடிப்பதற்கான வாய்ப்புகள் உண்டு.

5) அதிக ஐ.பி.எல் போட்டிகளில் களமிறங்கிய வீரர்கள்

 சுரேஷ் ரெய்னாவின் மற்றொரு ஐ.பி.எல் சாதனையும் இந்த சீசன் உடைக்கப்பட இருக்கிறது, அது தான் ஐ.பி.எல் போட்டிகளியே அதிகபட்சமாக 193 போட்டிகள் பங்கேற்ற வீரர் என்ற பெருமை. ஐபிஎல் போட்டிகளில் 190 போட்டிகள் விளையாடிய தோனி மூன்று போட்டிகளில் பங்கேற்கும் நிலையில் ரெய்னாவின் சாதனை முறியடிக்கப்படும். மூன்றாவது இடத்தில் 188 போட்டிகளில் விளையாடிய ரோஹித் ஷர்மாவும், தோனியும் 200 போட்டிகளை விளையாடிய வீரர்கள் என்ற சாதனையை இந்த சீசனில் படைக்க உள்ளனர்.

6) ஐ.பி.எல் - வெளிநாட்டு வீரர்கள்

ஐ.பி.எல் தொடரில் அதிக ரன்களை குவித்த வெளிநாட்டு வீரர் யார் என்று யூகித்தால் கிறிஸ் கெயில், டி வில்லியர்ஸ், வாட்சன் போன்ற பெயர்கள் நினைவுக்கு வரலாம். ஆனால் அவர்களை விட குறைந்த போட்டிகளில் விளையாடியுள்ள டேவிட் வார்னரே ஐ.பி.எல் போட்டிகலில் அதிக ரன்கள் குவித்த வெளிநாட்டு வீரர். சுமார் 4706 ரன்களை குவித்துள்ள வார்னர் இந்த சீசனில் வெறும் 294 ரன்கள் மேலும் அடிப்பதன் மூலம் ஐ.பி.எல் தொடரில் 5000 ரன்கள் அடித்த முதல் வெளிநாட்டு வீரர் என்ற சாதனையை படைப்பார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com