ஒரே ஆண்டில் இரண்டாவது முறை.. இந்திய அணி நிகழ்த்திய புதிய சாதனை!

ஒரே ஆண்டில் இரண்டாவது முறை.. இந்திய அணி நிகழ்த்திய புதிய சாதனை!
ஒரே ஆண்டில் இரண்டாவது முறை.. இந்திய அணி நிகழ்த்திய புதிய சாதனை!
Published on

இந்தியா ஜிம்பாப்பே இடையிலான முதல் ஒரு நாள் போட்டியில் வெற்றி பெற்றதை அடுத்து, ஒரே ஆண்டில் இரண்டு முறை 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று புதிய சாதனையை படைத்திருக்கிறது இந்திய அணி.

இந்தியா ஜிம்பாப்பே இடையேயான மூன்று போட்டிகள் அடங்கிய ஒரு நாள் தொடரின் முதல் ஒரு நாள் போட்டி ஜிம்பாப்பேவில் ஹராரேவில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீசியது. இதையடுத்து முதல் இன்னிங்க்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 189 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது ஜிம்பாப்பே அணி.

பின்னர், 189 என்னும் இலக்கை துரத்திய இந்திய அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. தொடக்க ஆட்டக்காரர்களான ஷிகர் தவான் மற்றும் சுப்மன் கில் இருவரும் சிறப்பாக விளையாடினர். ஷிகர் 81 ரன்கள் மற்றும் சுப்மன் கில் 82 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இறுதிவரை களத்தில் இருந்தனர். இந்திய அணி 31ஆவது ஓவரில் இலக்கை எட்டி வெற்றி பெற்றது.

சிறப்பாக பந்து வீசி ஜிம்பாப்பே அணியின் தொடக்க ஆட்டக்காரர்களை முதல் 10 ஓவர்களிலேயே எடுத்து இந்தியாவின் வெற்றியை எளிதாக்கிய தீபக் சாஹர் ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்நிலையில், இந்த போட்டியை இந்தியா 10 விக்கெட்டுகளில் வெற்றி பெற்றதை அடுத்து, இந்த ஆண்டில் இந்தியா 10 விக்கெட்டுகளில் வெற்றி பெரும் இரண்டாவது போட்டியாக இது அமைந்துள்ளது. இதற்கு முன்பு ஜூலை மாதத்தில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான போட்டியை 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றிருந்தது. இந்நிலையில் ஒரே ஆண்டில் இரண்டு முறை 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்திய அணி புதிய சாதனையை நிகழ்த்தி உள்ளது.

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான இந்திய அணி தொடர்ச்சியாக 13வது முறை வெற்றியை பதிவு செய்துள்ளது. ஒரு அணிக்கு எதிராக இந்திய அணி தொடர்ச்சியாக அதிக வெற்றிகளை குவித்தது ஜிம்பாப்வே அணிக்கு எதிராகத்தான். இந்த வெற்றிகள் 2013 - 2022 ஆம் ஆண்டுகளில் பெற்றவை. இரண்டாவதாக வங்கதேசம் அணிக்கு எதிராக தொடர்ந்து 12 வெற்றிகளை இந்திய அணி பெற்றிருந்தது. நியூசிலாந்து அணிக்கு எதிராக 11 வெற்றிகளையும் பெற்றிருந்தது.

10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற போட்டிகளில் இந்திய அணியின் அதிகபட்ச ஓபனிங் பார்ட்னர்ஷிப் 197 ரன்கள் ஆகும். இதே ஜிம்பாப்வே அணிக்கு எதிராக 1998 ஆண்டில் இந்த ரன்கள் அடிக்கப்பட்டிருந்தது. அதற்கு அடுத்தபடியாக 192 ரன்களை இன்றையப் போட்டியில் இந்திய அணி குவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com