'வீரர்களின் காயம் குறித்த புரிதல் இல்லாமல் பேசுகின்றனர்’- கொந்தளித்த கங்குலி

'வீரர்களின் காயம் குறித்த புரிதல் இல்லாமல் பேசுகின்றனர்’- கொந்தளித்த கங்குலி
'வீரர்களின் காயம் குறித்த புரிதல் இல்லாமல் பேசுகின்றனர்’- கொந்தளித்த கங்குலி
Published on

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. அண்மையில் பிசிசிஐ, கோலி தலைமையிலான ஆஸ்திரேலிய சுற்றுப் பயணத்திற்கான இந்திய அணியை அறிவித்தது. 

அதில் பெரும்பாலான வீரர்கள் ஐபிஎல் தொடரில் விளையாடியதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஆஸ்திரேலிய பயணத்திற்கு தேர்வான வீரர்களில் சிலர் காயத்தினால் அவதிப்பட்டு வருவது சில தினங்களுக்கு  முன்னர் தெரிந்தது. 

குறிப்பாக கொல்கத்தா அணிக்காக விளையாடிய தமிழகத்தை சேர்ந்த வருண் சக்கரவர்த்தி தோள்பட்டை காயத்தினால் தொடரிலிருந்து விலகியுள்ளார். தொடர்ந்து சாஹாவும் காயத்தினால் அவதிப்பட்டு வருகிறார். இருப்பினும் அவர் டெஸ்ட் தொடருக்கான அணியில் இடம் பெற்றுள்ளார். அவர் அணியில் விளையாடுவது குறித்து பின்னர் உறுதி செய்யப்படும் என சொல்லப்பட்டுள்ளது. 

இந்நிலையில்  ரசிகர்களும், கிரிக்கெட் ஆர்வலர்களும் இது குறித்து விமர்சித்து வந்தனர். ‘வீரர்கள் காயம் குறித்து விமர்சிப்பவர்கள் அது குறித்த தெளிவான புரிதல் இல்லாமல் இருக்கின்றனர்’ என கோபத்தில் வார்த்தைகளை கொப்பளித்துள்ளார் பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி. 

“வீரர்களின் காயம் குறித்த விவரங்கள் பிசிசிஐக்கும், பிசியோவுக்கும், NCAவுக்கும் மட்டுமே தெரியும். பிசிசிஐ எப்படி இயங்குகிறது என யாரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. காயம் குறித்த எந்த புரிதலும் இல்லாமல் பேசி வருகின்றனர். ஐபிஎல் தொடரின்போது இந்திய பிசியோ மற்றும் பயிற்சியாளர்கள் துபாயில் தான் தங்கியிருந்தனர். சாஹா டெஸ்ட் தொடரில் தான் விளையாட உள்ளார். அதற்குள் அவர் முழு உடற்தகுதி பெற்றுவிடுவார்” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com