பரஸ்பர கிரிக்கெட் தொடரை தவிர்த்ததற்காக, பிசிசிஐ 450 கோடி ரூபாய் நஷ்டஈடு வழங்க வேண்டும் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கோரியுள்ளது.
இதுகுறித்து கராச்சியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் நஜம் சேத்தி, 2014-ஆம் ஆண்டு செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி இந்திய அணி, 6 போட்டித் தொடர்களில் பாகிஸ்தான் அணியுடன் விளையாடி இருக்க வேண்டும். ஆனால் ஒப்பந்தத்தை நிறைவேற்ற இந்திய கிரிக்கெட் வாரியம் தவறிவிட்டது. இதனால் இந்திய கிரிக்கெட் வாரியம் 70 மில்லியன் டாலரை (ரூ.450 கோடி) எங்களுக்கு நஷ்ட ஈடாக தர வேண்டும்’ என்று தெரிவித்தார்.